இது குறித்து கூறிய எகிப்திய ஜனாதிபதி அப்துல் படா அல் சிசி, "ஐ.எஸ். குழுவினால் விமானம் வீழ்த்தப்படுவதாகச் செய்யப்படும் பிரசாரம், எகிப்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை குலைப்பதற்கான ஒரு வழியாகும்.
சினாய் தீபகற்பம், குறிப்பாக அந்தப் பகுதி எங்களுடைய முழுக்கட்டுப்பாட்டில் இருக்கிறது" என கூறியுள்ளார்.
ரஷ்யாவைச் சேர்ந்த ஏயார்பஸ் சி 321 ரக விமானம் கடந்த சனிக்கிழமை சினாய் தீவுக்கு மேல் பறந்துகொண்டிருந்தபோது நடுவானில் சிதறியது. இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த 224 பேரும் உயிரிழந்தனர்.
வெளிக் காரணிகளாலேயே இந்த விமானம் விபத்துக்குள்ளானதாக, விமானத்தை இயக்கும் நிறுவனமான கொகலிமாவிய தெரிவித்திருந்தது.
ஆனால், இது மிகவும் அவசரமாக சொல்லப்பட்ட கருத்து என்றும் எந்த சரியான தகவலின் அடிப்படையிலும் சொல்லப்படவில்லையென்றும் அந்நாட்டு விமான போக்குவரத்து நிறுவனத்தின் தலைவரான அலெக்ஸாந்தர் நெரத்கோ தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு அவசரப்பட்டு முடிவுகளுக்கு வர வேண்டாமென எகிப்திய ஜனாதிபதி அல் சிசி தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் ஆர்வமுடையவர்கள் அனைவரும் விசாரணையில் பங்கேற்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.