அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வேதாளம் திரைப்படம் எதிருவரும் தீபாவளி தினத்தன்று திரைக்கு வர இருக்கின்றது. எனினும் திரைக்கு வர முன்னரே பல்வேறு சாதனைகளை இந்த திரைப்படம் படைத்துள்ளது.
இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகிய போது அதிகளவினர் பார்வையிட்ட சாதனையைப் புரிந்தமை நாம் அறிந்ததே.
மேலும் தீபாவளியன்று வெளிநாடுகளிலும் வேதாளம் வெளியிடப்படவுள்ள நிலையில் முதன் முறையாக போலந்து நாட்டில் அதே தினத்தில் வெளியிடப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.அத்துடன் போலந்து நாட்டில் தமிழ் திரைப்படங்கள் நேரடியாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.