பிரிட்டனைச் சேர்ந்த யுவதியொருவர் கோழி களுக்காக விசேட அங்கிகளை தயாரித்துள்ளார்.
25 வயதான நிகோலா கொங்டன் எனும் இந்த யுவதி, கோழிகளை குளிரிலிருந்து பாதுகாப்பதற்காக இந்த ஆடைகளைத் தயாரித்துள்ளதாக கூறுகிறார்.
தனது தாயார் ஆன் கொங்டனின் (56) உதவியுடன் இந்த பின்னல் ஆடைகளை நிகோலா தயாரித்துள்ளார்.
இந்த ஆடைகளை விநியோகிக்குமாறும் வெளிநாடுகளிலிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக நிகோலா கொங்டன் தெரிவித்துள்ளார்.

