தனது பெண்ணுறுப்புக்குள் சிறிய துப்பாக்கியொன்றை ஒளித்துவைத்திருந்த யுவதியொருவருக்கு அமெரிக்க நீதிமன்றமொன்று 3 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
21 வயதான டல்லாஸ் ஆர்சர் எனும் இந்த யுவதிக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த யுவதி 2014 ஏப்ரல் மாதம் டென்னிஸ் மாநிலத்திலுள்ள கிங்ஸ்போர்ட் நகரில், அதிவேகமாக வாகனம் செலுத்திக்கொண்டிருந்தபோது பொலிஸாரால் மறிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டிருந்தார்.
அவரிடம் சாரதி அனுமதிப்பத்திரமும் இருக்கவில்லை.
அதையடுத்து, அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பெண் சிறைக்காவலர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் அவரின் உடல் சோதனையிடப்பட்டது.
இதன்போது, 10.1 சென்ரி மீற்றர் (4 அங்குலம்) நீளமான 22 மினி ரிவோல்வர் ஒன்று டல்லாஸ் ஆர்ச்சரின் பெண்ணுறுப்பிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டல்லாஸ் ஆர்ச்சர், 3 வருட காலம் சிறைத்தண்டனை அனுபவிப் பதற்கு அதிகாரிகளுடன் இணங்கினார்.
கைது செய்யப்பட்டபோது 19 வயது யுவதியாக இருந்த டல்லாஸ் ஆர்ச்சர், எதற்காக துப்பாக்கியை இப்படி வைத்திருந்தார் என்பது ஆர்சருக்கே புரியவில்லை எனவும் அவர் அப்போது போதையில் இருந்திருக்கலாம் எனவும் அவரின் சட்டத்தரணி டேனியல் கென்ட்வெல் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் வைத்திருந்தமை, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுகளையும் டல்லாஸ் ஆர்ச்சர் ஒப்புக்கொண்டார்.
இதனால், 3 வருட காலம் சமூக சேவையில் ஈடுபட வேண்டும் எனவும் 2 வருட காலம் நன்நடத்தை கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் 1000 டொலர் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேற்படி 22 மினி ரிவோல்வர் 10 சென்ரிமீற்றர் நீளமானது என்பதுட,ன் 5 செ.மீ உயரமும் 1.5 செ.மீ. அகலமும் 142 கிராம் எடையையும் கொண்டதாகும்.

