அம்பாரை மாவட்டத்திலுள்ள 90 பாலர் பாடசாலைகளுக்குப் பெறுமதியான கற்பித்தல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று காரைதீவு சன்முகா மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் அம்பாரை மாவட்ட செயலாற்றுப் பணிப்பாளர் கே.எம்.சுபையிர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், சிறுவர் நன்நடத்தைப் பராமரிப்பு, சமூக சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, உபகரணங்களை வழங்கி வைத்தார்.
மேலும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மெத்தானந்த டீ சில்வா, கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்வி பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், பணியகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஏ.எல்.இப்றாகீம், செயலாற்றுப் பணிப்பாளர் எஸ்.புஞ்சிபண்டா, சன்முகா வித்தியாலய முதல்வர் ஆர்.ரகுபதி ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சும், பாலர் பாடசாலை கல்விப் பணியகமும் தமது நிருவாகத்தின் கீழுள்ள 222 பாலர் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நன்நோக்கில் பெறுமதியான கற்பித்தல் உபகரணங்களை வழங்கி வருவதாகவும், அம்பாரை மாவட்டத்தில் 90 தமிழ், சிங்கள மொழி மூலப் பாடசாலைகளுக்கு இன்று வழங்குவதாகவும், இதற்கென்று ஊடீபு - நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் குறித்தொதுக்கப்பட்ட ரூபாய் 15 இலட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்வி பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகம் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் நசீர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- “இந்த நாட்டினுடைய ஜனாதிபதி மைத்திரி அவர்களும் பிரதமர் ரணில் அவர்களும் சேர்ந்து நாட்டிலும், மாகாணங்களிலுமுள்ள பல பிரச்சினைகளைத் தீர்க்கும் முன்னெடுப்புக்களில் பல முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளனர். கடந்த காலங்களில் இருந்த ஆட்சியின் தலைவர்கள் தனித்தே முடிவுகளை எடுத்தனர். இன்று எது எவ்வாறு இருப்பினும் நாட்டினுடைய எல்லாப் பிரதேசங்களும் அபிவிருத்தி செய்யப்படவேண்டும், அவை மூன்று இனத்தவர்களையும் சென்றடைய வேண்டும், சமபங்குகளாகப் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசின் அமைச்சர் வாரியம் தீர்மானம் எடுத்திருக்கின்றது. கிழக்கு மாகாணம் ஒரு வளம்நிறைந்த மாகாணமாக அபிவிருத்தி அடைய இருக்கின்றது. எதிர்காலத்தில் இப்பாலர் பாடசாலைகளைத் திறன்மிக்கதாக மாற்றுவதற்கு நானும், எமது அமைச்சர்களும், முதலமைச்சரும் சேர்ந்து பல முன்னெடுப்புக்களைச் செய்யவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இறுதியில் அமைச்சர் நசீரும், மாகாண சபை உறுப்பினர் மெத்தானந்த டீ சில்வாவும் பாலர் பாடசாலைப் பணியக மாகாணத் தவிசாளர் பொன்.செல்வநாயகம், செயலாற்றுப் பணிப்பாளர் சுபையிர் ஆகியோர்களால் பொன்னாடை போற்றி, நினைவுச் சின்னம் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.