Advertisement

Main Ad

12ஆம் கிராமம், சளம்பைக்கேணி-04 ஸாஹிரா பாலர் பாடசாலையின் வருடாந்த கலை கலாச்சார விழா..படங்கள்



12ஆம் கிராமம், சளம்பைக்கேணி-04 ஸாஹிரா பாலர் பாடசாலையின் வருடாந்த கலை கலாச்சார விழா பாலர் பாடசாலை தலைமை ஆசிரியை ஏ.பசீலா தலைமையில்   (21) பாலர் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான  சட்டத்தரணி ஆரிப் சம்சுத்தீன், ஏ.எல்.தவம், மத்தியமுகாம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டீ.எஸ்.பாலசூரிய,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேச மத்திய குழக்களின் அமைப்பாளர் ஏ.சீ.நஸார் ஹாஜி, சர்வோதயத்தின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் ஏ.ஏ.எஸ்.அபேரத்ன,  சாளம்பைக்கேணி மத்திய குழவின் தலைவர் ஏ.எம்.மஹ்ரூப்,  சளம்பைக்கேணி-04 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஹபீர், 12கிராமம் ~லாமிய விவசாய அமைப்பின் தலைவர் எம்.சீ.றஸாக், சளம்பைக்கேணி-04 கிராம அபிவிருத்தி சங்க தலைவர் எஸ்.எச்.அன்வர், ஸாஹிரா பாலர் பாடசாலையின் ஆசிரியைகளான ஐ.காலீதா, ஐ.ஹஸீனா, பெற்றோர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது சான்றிதழ்கள் மற்றும் பரிசுப்பொதிகள் போன்றவற்றை கலந்துகொண்ட அதிதிகளினால் மாணவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.