அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரேமோர் தோட்டத்தில் தேயிலை மலையில் வளரும் புற்களை அழிக்க தெளிக்கபடும் விஷ மருந்தினால் பாதிக்கபட்டு 07 ஆண் தொழிலாளர்கள் 18.11.2015 அன்று காலை 11 மணியளவில் அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
ஊட்டுவள்ளி பிரிவுக்குட்பட்ட பிரேமோர் தோட்டத்தில் 18.11.2015 அன்று தோட்ட நிர்வாகம் தேயிலை மலைக்கு தெளிப்பதுக்காக புதிதிக பஸ்டா என்று அழைக்கபடும் களை ஒழிப்பு விஷ மருந்தை அறிமுகம் செய்து தொழிலாளர்களிடம் இதனை தெளிக்குமாறு கூறியுள்ளனர்.
இதனையடுத்து தொழிலாளரகள் வழமைபோல் மருந்து தெளிக்க சென்றுள்ளனர் ஆனால் தோட்ட வெளிகள அதிகாரியிடம் பாதுகாப்பு உடைகள் கேட்டபோதிலும் இது தற்போது தேவையில்லை இம்மருந்து பரிசோதனைக்காக தெளிக்கபடுகின்றது. இதைபற்றி கவலைபடவேண்டாம் என தெரிவித்ததாக பாதிக்கபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இது இவ்வாறுயிருக்க ஆரம்பத்தில் கிரமக்சன் மற்றும் வீடோல் போன்ற களை ஒழிப்பு மருந்துகள் தெளிக்கபட்டு வந்துள்ளது. ஆனால் 18.11.2015 அன்று தெளிக்கப்பட்ட புதிய மருந்து தொடர்பாக தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு விளக்கம் எதுவும் வழங்கபடவில்லையென இவர்கள் தெரிவிக்கின்றனர்.
மருந்து தெளித்து ஒரு மணிநேரத்தில் கண் எறிச்சல், தொண்டை வழி, கால் நடுக்கம், மயக்கம் போன்ற உபாதைகளுக்கு ஆளாகிய நிலையில் பாதிக்கபட்ட தொழிலாளர்களை தோட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போது வைத்தியசாலை அதிகாரி இன்மையால் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியதாகவும் தோட்ட நிர்வாகம் இதனை கண்டுகொள்ளவில்லையென இவர்கள் மேலும் தெரிவித்தனர்.