Advertisement

Main Ad

அட்டன் பொஸ்கோ கல்லூரியின் மூன்றாம் மாடி நிர்மாணப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு வைபவம்



மத்திய மாகாண விவசாய சிறிய நீர்பாசன, கால்நடை உற்பத்தி மற்றும் அபிவிருத்தி, கமநல அபிவிருத்தி மீன்பிடி விவகாரம், இந்து கலாசாரம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் எம்.ரமேஷ்வரன் அவர்களின் வேண்டுகோள்கிணங்க மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக ரூபா 4.5 மில்லியன் செலவில் அட்டன் சென்.ஜோன் பொஸ்கோ கல்லூரியின் கட்டிடத்தின் மூன்றாம் மாடி நிர்மாணப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு வைபவம் 26.10.2015 அன்று அமைச்சர் எம்.ரமேஷ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.சக்திவேல், கணபதி கனகராஜ், பிலிப்குமார், சிங் பொன்னையா மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை பழைய மாணவர்கள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.