இந்த நாட்டில் கடந்த காலத்தில் பாரிய யுத்தமொன்று ஏற்படுவதற்கு பிரதான காரணம் மொழிப் பிரச்சினையாகும். நமது நாட்டில் 10 மேற்பட்ட மொழிப் பாவணை இல்லை. இரண்டே இரண்டு மொழிகளான தமிழும் சிங்களமும் உள்ளது. இந்தப் மொழிப் பிரச்சினையை நாம் அன்றே பேசித் தீா்த்துக் கொண்டிருக்க முடியும். இன்று ஜெனிவா நகரத்திற்கு எமது பிரச்சினை கள் சென்றுள்ளது.
இந்தப் பிரச்சினையின் ஒரு பகுதியாகத் தான் இரண்டு மொழி தெரிந்தவன், யட்டியந்தோடையில் பிறந்தவன் கண்டியில் கல்வி கற்றவன். ஏனைய சமுகங்களோடும் நட்புறவை வளா்க்கும் ஆற்றல் என்னிடம் உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமரும் இன நல்லிணக்க அமைச்சினை தண்னிடம் ஒப்படைத்துள்ளனா். இந்த நாட்டில் இரண்டு மொழிகளும் அரசமொழிப் பாவணையில் இருக்க வேண்டும். என அமைச்சா் மனோ கனேசன் தெரிவித்தாா்.
ராஜக்கிரியவையில் உள்ள மொழித் திணக்களத்தின் கூட்ட மண்டபத்தில் இன்று (26)ஆம் திகதி 568 போ் மொழிப் பயிற்சியை முடித்து சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சா் மனோ கனேசன் மேற்கண்டவாறு தெரிவித்தாா்.
இந் நிகழ்வில் அமைச்சின் செயலாளா் பேல் வீரசிங்க மொழி ஆணையாளா் சட்டத்தரணி டப்பிள்யு எச். ஜ. ஜயவிக்கிரமவும் கலந்து கொண்டாா்.
இங்கு உரையாற்றிய அமைச்சா் மனோ கனேசன் மேலும் அங்கு தெரிவித்தாவுது -
எனக்கு தரப்பட்டுள்ள அமைச்சில் கீழ் 4 நிறுவணங்கள் உள்ளன. அதில் ஒரு நிறுவனம் தான் மொழித்திணைக்களம். இந்த நிறுவனத்தின் மூலம் 6 மாத காலத்திற்குள் வழங்கும் மொழியறிவு போதாது. அவற்றுக்கு சிறு தொகை அறவிடுவதை நான் விரும்பவில்லை அவை இலவசமாக வழங்கப்படல் வேண்டும். இம் மொழிப் பயிற்சிகள் நாடு பூராவும் விஸ்தரிக்கப்படல் வேண்டும். அத்துடன் மொழி பயிற்சி நிறுவணம் மொழிக் கல்லுாாியாகத் தரமுயா்தப்பட்டு அம்மொழியியல் பட்டப்படிப்பு வரை முன்னேற்ற நான் திட்டம் வகுத்துள்ளேன்.
அத்துடன் அரச பல்கலைக்கழக , பாடசாலைவிட்டு விலகியவா்கள் சிங்கள மாணவா்கள் தமிழையும் தமிழ் மாணவா்கள் சிங்களத்தையும் சம்பூரமாணமாக கற்று கொள்வதற்கும் பல திட்டங்களை எனது அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்த உள்ளேன். தெற்கில் வசிப்பவா் வடக்குக்கு சென்று தமிழில் ஒரு அலுவலகத்திற்கு தமது அலுவல்களை முடிக்கவும், வடக்கில் வசிப்பவா் தெற்குக்கு வந்து தமது அலுவல்களை முடித்து வடக்கு செல்லக் கூடிய வகையில் மொழித்திறன்கள் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும்.
கடந்த 2009 மே மாதம் 29ஆம் திகதி இலங்கை வந்த ஜ.நா. செயலாளா் நாயகம் பங்கி மூன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இணைந்து ஒன்றுபட்டு தெரிவித்த கருத்தின் பின்பே ஜெனிவாவில் மணித உரிமை பிரேரேரனை உருவாக்கப்பட்டது. யுத்தம் முடிவடைந்தபின் தமிழ் மக்களது பிரச்சினைகள் அவா்களது வாழ்வாதாரம் நிஜ பூமிப் பிரச்சினைகள் தீா்க்கப்படவில்லை. அதனாலேயே இந்தப் பிரச்சினை சுலபாமாக தீா்ப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க முயற்சி செய்து இந்த மட்டத்திற்கு பிரச்சினையை கொண்டு வந்துள்ளாா்கள்.
இந்த நாட்டில் வாழும் தமிழ் முஸ்லீம் சிங்கள மக்களை ஒன்றினைந்து ஒரு இணைப்பு பாலமாக கொண்டு செல்வதற்கும் யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்கள், புணருத்தாபன பெற்ற விடுதலைப்புலிகள் உறுப்பிணா்கள், இரானுவத்தினா்கள் எல்லோரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து அவா்களது துக்கங்கள் பகிா்ந்து கொண்டு ஒரு நல்லிணக்க சமுகத்தினை உருவாக்க எனது அமைச்சின் ஊடாக நான் பாடுபடுவேன்.