
சர்வதேச சிறுவர் தினம் நிகழ்வுகள் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஏற்பாட்டில் ற (01) இடம்பெற்றது. சிறுவர் தின நிகழ்வுகளின்போது மல்வானை உளஹிட்டிவல அல்- மஹ்மூத் வித்தியாலயத்தில் அதிபர் எம்.ரீ.எம். உஸ்மான் தலைமையில் பல்வேறு நிகழ்வுகள் மாணவர்களுக்கான பரிசளிப்பு என்பன இடம்பெற்றன.
ஆசிரியர்களான எஸ்.நித்தியராஜ் முஹம்மட் நிஸாம் எஸ்.அஷ்ரப் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு அதிதியாக களனி வலயக்கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் முஹம்மட் சாலிஹ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
இங்கு மாணவர்களின் விளையாட்டு வினோத நிகழ்வுகள் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாடகங்கள் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.