
அதற்கிணங்க இன்றைய தினம் சிறுவர்களுக்கான பலூன் உடைத்தல், பலூன் பாதுகாத்தல், முயலோட்டம், எலியோட்டம், போத்தலில் தண்ணீர் நிரப்புதல், மற்றும் கயிறு இழுத்தல் போன்ற சுவாரஸ்யமான நிகழ்சிகள் பல இடம்பெற்றதோடு போட்டி நிகழ்ச்சியில் பங்கு பற்றி வெற்றியீட்டிய மாணவ செல்வங்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதோடு கடந்த 2014 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து உதவித்தொகை பெறும் மாணவர்களுக்கான நினைவுச்சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் 2015 ம் ஆண்டுக்கான சமூக விஞ்ஞான போட்டியில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்று தேசிய மட்ட போட்டியில் பங்கு பற்றி இப்பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவன் செல்வன் ஏ. எச். எம். சஸ்லீன் அவர்கற்கு விஷேட பரிசு அவரை பயிற்றுவித்த சிரேஷ்ட சமூக கல்வி ஆசிரியரும் நிந்தவூர் கமு/ கமு/ இமாம் கஸ்ஸாலி வித்தியாலய பிரதி அதிபருமான ஜனாப் எம். அச்சிமுகம்மட் பாடசாலையின் அதிபர் ஜனாப் ஏ. எம். எம். பாரூக் ஆகியோர்களினால் வழங்கப்பட்டது.