வடக்கு யார்க் ஷயர் பகுதியில் அமைந்துள்ள மெல்டோன் ரயில் நிலையத்தில் புகுந்த ஒரு இளம் ஜோடி அங்கிருந்த பயணிகள் முகம் சுழிக்கும்படி நடந்துகொண்டுள்ளது.
நடைபாதையில் சிறுநீர் கழித்த இளைஞரை பாராட்டிய இன்னொரு இளைஞன் அங்கிருந்த குப்பைத்தொட்டியை நகர்த்தி நடைபாதையில் இட்டு மிதித்துள்ளார்.
இதனிடையே, ஒரு ஜோடி அங்கிருந்த பயணிகள் முன்னிலையில் அநாகரிகமாக நடந்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்து நகர்ந்து சென்று அருகாமையில் இருந்த மிதிவண்டி நிறுத்துமிடத்தில் அந்த ஜோடி உறவு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, போக்குவரத்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ பகுதிக்கு வந்து சேரும் முன்னரே அந்த ஜோடி அங்கிருந்து தப்பியுள்ளது.
ரயில் நிலையத்தில் பாலியல் உறவு கொண்ட ஜோடிகளின் மொத்த நடவடிக்கையும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கெமராக்களில் பதிந்துள்ளன.
அந்த பதிவுகளை சோதனையிட்ட பொலிஸார் அவர்களை தேடி வருகின்றனர்.
மேலும் அந்த நபர்கள் குறித்து கூடுதல் தகவல்கள் அறியவரும் பொதுமக்களும் பொலிஸாருக்கு தகவல்கள் தந்து உதவும்படியும் வலியுறுத்தியுள்ளனர்.