மரியம் அல் சுபேய் எனும் இப்பெண், சவூதி அரேபியாவில் செல்லிடத் தொலைபேசி திருத்துனராக பணியாற்றும் முதலாவது பெண் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சவூதி அரேபிய தலைநகர் றியாத்தில், மரியம் அல் சுபேயின் தொலைபேசி பழுதுபார்க்கும் நிலையம் அமைந்துள்ளது.
இவர் பெண்களுக்கு மாத்திரமே இச்சேவையை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
தினமும் 90 முதல் 120 வரையிலான தொலைபேசிகள் பழுதுபார்க்கப்படுவதற்காக தனக்கு வழங்கப்படுவதாக மரியம் அல் சுபேய் தெரிவித்துள்ளார்.
“9 வருடங்களுக்கு முன்னர் செல்லிடத் தொலைபேசிகளை பழுதுபார்க்க ஆரம்பித்தேன். சுயமாகவே இது குறித்து நான் கற்றுக்கொண்டேன்.
பின்னர் ஏனைய பெண்களுக்கு உதவுவதற்காக தொலைபேசி பழுதுபார்க்கும் சேவையை ஆரம்பித்தேன்.
இப்போது, எனது நிலையத்துக்கு சகல வகையான செல்லிடத் தொலைபேசிகளுடன் மடிக்கணினிகளும் பழுதுபார்ப்பதற்காக கொண்டு வரப்படுகின்றன.
எனது குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக உள்ளதுடன், பெண்களான எனது வாடிக்கையாளர்களும் உதவிகரமாக உள்ளனர்” என மரியம் அல் சுபேய் தெரிவித்துள்ளார்.