அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் உலக சிறுவர் தினத்தையொடடி இன்று (01) வியாழக்கிழமை சிறுவர் தின வைபவங்கள் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.எச். அப்துல் றஹ்மான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள் பதாதைகளும் கொடிகளும் ஏந்தியவாறு வீதி விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து மாணவர்களது விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன. சிறுவர்களுக்கான பலூன் உடைத்தல், சாக்கோட்டம், பந்து எறிதல், முட்டி உடைத்தல், கயிறு இழுத்தல், சமநிலை ஓட்டம், போத்தலில் மண் நிரப்புதல், குறி பார்த்தெறிதல் போன்ற விநோத வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஆசிரியர்களும்; மாணவர்களும் கலந்து கொண்டனர்