Advertisement

Main Ad

மஸ்கெலியா சென்.ஜோசப் தமிழ் மகா வித்தியாலயத்தில் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம்


சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு மஸ்கெலியா சென்.ஜோசப் தமிழ் மகா வித்தியாலயத்தில் 120 பேர் கொண்ட தரம் 5 மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அதிபர் ஆகியோர் இணைந்து எல்லோருக்கும் முன்உதாரணமாக இருக்கும் வகையில் இந்த முதியோர் தினத்தை 01.10.2015 அன்று விஷேடமான முறையில் கொண்டாடினார்கள்.

குறித்த மாணவ மாணவிகள் உட்பட ஆசிரியர்கள், அதிபர் ஆகியோர் அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட நோட்டன்பிரீட்ஜ் சந்திரா விஜயரட்ண முதியோர் இல்லத்திற்கு சென்று பெரும்பாலான சிங்கள இன முதியோர்கள் இருக்கும் இந்த இல்லத்திற்கு சென்று முதியோர்களுக்கு உணவு உட்பட அத்தியவசிய பொருட்களை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளதோடு முதியோர்களின் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டார்கள்.