Advertisement

Main Ad

சேகு இஸடீனுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையை விமர்சிக்க என்ன அருகதை இருக்கின்றது?


காலத்துக்கு காலம் எலும்புத் துண்டுகளுக்கு சோரம் போகின்றவர் என்ற சிறப்பு பெயர் பெற்றவரும், மக்களால் நிராகரிக்கப்பட்டவருமான சேகு இஸடீனுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையை விமர்சிக்க என்ன அருகதை இருக்கின்றது?

தனது வாசிக்கேற்றவாறு காலத்துக்கு காலம் அரசியல் நிறம் மாற்றிக்கொள்ளும் சேகு இஸ்ஸதீன் எமது கட்சியின் தலைவரின் அண்மைய பாராளுமன்ற உரையை விமர்சிப்பதுக்கு எந்த அருகதையும் அற்றவர். தலைவர் அவர்களின் உரை ஏனைய சமுகத்தின் உணர்வை மட்டம்தட்டுவதாக இருக்கவில்லை.
யதார்த்ததையே தலைவர் குறிப்பிட்டு இருகின்றார். மாறாக எந்த கட்சிக்கும் சோரம் போகும் நோக்கில் அவரது உரை அமையவில்லை. தலைவர் ஹக்கீம் அவர்களுக்கு வடகிழக்கு பிரச்சினை பற்றி ஏதும் தெரியாது என்றும், தான் மட்டுமே அனைத்தையும் அறிந்த மாமேதை என்ற எண்ணத்தில் விமர்சிக்கும் சேகு அவர்கள் முஸ்லிம் காங்கிரசின் தலைமை மறைந்த தலைவர் இருந்த காலத்திலும் அவர் மறைந்த பின்பும் முஸ்லிம் சமுகம் சார்பாக அணைத்து விதமான பேச்சு வார்த்தைகளிலும் பங்கு பற்றி மிகவும் சிறந்த முறையில் அவர் வாதாடிய விவாதங்களை சேகு போன்ற எலும்புதுண்டுக்கு சோரம் போகின்றவர்களுக்கு தெரியாவிட்டாலும் மக்களும், சர்வதேச தலைவர்களுக்கு நன்கு அறிவர்.
முஸ்லிம் காங்கிரசின் தலைமை யதார்த்ததையே குறிப்பிட்டது. இன்னும் யுத்தம் யுத்தம் என்று சொல்லி கொண்டு இந்த நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்ல முடியாது. நடைமுறை சாத்தியமான விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றே குறிப்பிட்டதே தவிர தமிழ் மக்களின் உணர்வுகளை மழுங்கடிக்கும் நோக்கிலல்ல.
முஸ்லிம்களும் தமிழருக்கு நிகரான பாதிப்பை அனுபவித்தவர்கள் அவரகளது காணிகளும் கபளீரகம் செய்யபட்டுள்ளது . அவைகளும் பேசப்பட வேண்டும் என்னும் போது அது தமிழர்களின் போராட்டத்தை கொச்சை படுத்துவது என்ற அருத்தம் ஆகாது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு முழு கட்டமைப்புள்ள அரசியல் கட்சி. மாறாக காலத்துக்கு காலம் பணத்துக்கும், இதர சலுகைகளுக்கும் சோரம் போன ஏனைய கட்சிகளை போன்று சில்லறை கட்சி அல்ல. காழ்புனர்ச்சி கொண்ட சேகு போன்ற புல்லுருவீகளுக்கு கட்சியின் பலம் தெரியாத போதும் பேரினவாத கட்சிகளுக்கு தெரியும். முஸ்லிம் காங்கிரசின் மக்கள் பலம் தனித்து கேட்டு 9 பாரளுமன்ற உறுப்பினர்களை நாடு தழுவிய ரீதியில் பெற்றுக்கொள்ள கூடிய திராணி உள்ள கட்சி முஸ்லிம் காங்கிரஸ் ஏனைய கட்சிகளை போன்று பேரினவாதிகளின் முந்தானையில் ஒழிந்து அரசியல் செய்யும் அவசியம் முஸ்லிம் காங்கிரசுக்கு இல்லை.
தேவை ஏற்படின் தனித்து கேட்கும் அளவுக்கு மக்கள் சக்தி உள்ள கட்சி . சில வேளைகளில் இணைந்து கேட்பது நாட்டின் அரசியல் தந்திரோபாயம் கருதியே மற்றும்படி ஏனைய பெயர் தாங்கி கட்சிகள் போன்று பெரும்பான்மை கட்சிகளின் துணை இன்றி வெற்றி பெற முடியாது என்பது போன்று அல்ல.
சவால் விடுகிறோம் ரிசாத் அமைச்சரின் பணத்துக்கு அடிமை போன நீங்கள் தற்போது அதிகாரம் என்ற எலும்புத்துண்டுக்கு அலைந்து திரியும் இவரிடம் இயன்றால் முஸ்லிம் காங்கிரஸ் உடன் மயில் கட்சியையும் நாடு பூராக தனித்து கேட்க சொல்லுங்கள் வருகின்ற உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்களை பார்ப்போம் எது மக்கள் கட்சி என்று.
எனவே பாடத்தொடங்கினாள் கிழவியும் பாடுவது போன்று பதவி ஒன்றை பெறுவதற்காக ரிசாத் பதியுதீனுக்கு நல்லபிள்ளயாகவும், விசுவாசியாகவும் காட்டிக்கொள்ளு அரசியலை விட்டுவிட்டு யதார்த்தபூர்வமாக சிந்திக்கும்படி வேண்டுகிறோம்.