சிறுமியைக் கொலை செய்தவன் நானே என நான்காவது சந்தேக நபரான கொண்டயாவின் சகோதரன் சமன் ஜயலத் ஒத்துக்கொண்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறையினர் இன்று (05) நீதிமன்றில் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கொண்டயா மற்றும் அவரது சகோதரன் ஆகியோர் இன்று (05) மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே CID இனர் இதனை நீதிமன்றில் தெரிவித்தனர்.
மேலும் சிறுமியைக் கொலை செய்தவர் தனது சகோதரன் என கொண்டயா ஏற்கனவே பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.