அம்பாறை – தெஹியத்தகண்டிய உத்தரபுர மகா வித்தியாலய மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் நேற்று மாலை (04) மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் சீ.ஆர்.சாந்தினி புஸ்பகுமாரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அங்கு உரையாற்றுகையில்,
மாணவர்கள் தங்களின் திறமைகளை சிறு வயதிலேயே வெளிக்காட்டி வரும் இதேவேளை அவர்கள் எவ்வித அச்சமும், கூச்சமும் அற்ற நிலைமையில் இங்கு செயற்படுவதை பார்க்கும்போது எவ்வளவு சந்தோஷமாகவுள்ளது. இந்தளவுக்கு மாணவச் செல்வங்கள் செயற்படுவதற்கும், அவர்களின் திறமைகளை வெளி உலகிற்கு வெளிக்கொண்டு வருவதிலும் பெரும் பங்கினை ஆசிரியர்களும், பெற்றோர்களும் எடுக்கின்றனர்.
இன்று நாட்டில் இடம்பெருகின்ற சிறுவர் வன்முறைகளையும், குடும்ப வாழ்க்கையில் இடம்பெரும் பிரச்சினைகள் பற்றியும் எவ்வளவு ஆழமாக மிகத் தெளிவாக எடுத்துக் கூறுமளவிற்கு தங்களின் கலை நிகழ்வுகளின் மூலம் எடுத்துரைத்தார்கள். அதுமாத்திரமல்ல இன்றைய நவின யுகத்துக்கு ஏற்றாப்போல் தங்களின் அறிவுகளை விவேகமாகவும், வேகமாகவும் கொண்டு செல்வதை நாம் இங்கு காணக்கூடியாகவும், அந்தளவிற்கு இன்றைய இளம் சமுதாயம் இருப்பதை என்னி நான் பெருமிதமடைகின்றேன் என்றார்.