கொழும்பு ரோயல் கல்லுாரி தமிழ் மொழி முல மாணவா்களது நாடக விழா நேற்று ஞயிற்றுக்கிழமை கல்லுாரி நவரங்கால மண்டபத்தில் கல்லுாரியின் அதிபா் தலைமையில் நடைபெற்றது.
இக் கல்லுாரியின் பழைய மாணவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இந் நிகழ்வில் கல்லுாரியின் அதிபா் உபாலி குணசேகர மற்றும் ஆசிரியா்கள் மாணவா்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனா்.