ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் அமெரிக்க பிரேரணை எந்த வாக்கெடுப்புமின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது இராஜதந்திர வெற்றி என்பதனை ஏற்றுக்கொள்ள முடி
யாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் நான் லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி மும்மர் கடாபியின் தோளில் கையை வைத்திருந்ததாக கூறப்படுகின்றது. எனினும் இது தொடர்பில் பிரபலமான அந்த புகைப்படத் தில் எனது தோளில் கடாபிதான் கையை வைத்திருந்தார் என்றும் மஹிந்த ராஜபக் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனிவா தீர்மானம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் அமெரிக்க பிரேரணை எந்த வாக்கெடுப்புமின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது இராஜதந்திர வெற்றி என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது. சர்வதேச சட்டவல்லுனர்களின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக பொறிமுறைக்கு வெளிநாடுகளின் நிதி உதவியே கிடைக்கபெறவுள்ளது. இதனால் இலங்கையின் பொறிமுறை சர்வதேச பலமிக்க நாடுகளின் நிதியினால் முன்னெடுக்க வேண்டியேற்படும்.
ஆக்கிரமிப்பாளர் பிடியிலிருந்து இலங்கையை காப்பாற்றியுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பதாகைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. எனினும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது.
அமெரிக்காவுடன் இணைந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையின் ஊடாக இலங்கைக்கு எந்தவொரு நலனும் கிடைக்கபெற போவதில்லை. இதனால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதனையோ அல்லது அரசியல் ரீதியாக சாத்தியமற்றது என்பதனை புரிந்துகொள்ளாமல் அரசாங்கம் செயற்படுகின்றது.
நாட்டில் பாதுகாப்பிற்கு உறுதுணையாக உள்ள இராணுவ வீரர்களை பாதுகாக்க வேண்டியதே அரசாங்கத்தின் பிரதான கடமையாகும். அமெரிக்கா பிரேரணையின் 6 மற்றும் எட்டாவது பரிந்துரைகள் புனிதமான பொறுப்புகளுக்கு எதிரானதாகும்.
மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டமை அரசியலை மையமாக கொண்டு இடம்பெற்றதல்ல. அது சமுத்திர ரீதியான ஏற்பட்ட பிரச்சினை என்பதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகை என்பது அரசியல் ரீதியான நிபந்தனையை மையமாக கொண்ட சலுகையாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் நிகழ்ச்சி நிரலை இலங்கையின் மீது சுமத்தும் திட்டத்தை மையமாக கொண்டே குறித்த சலுகையை மீளப்பெறுவதற்கு என்னுடைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.
சர்வஜன வாக்குரிமையின் ஊடாக மக்கள் அரசாங்கத்தை நிறுவியது நாட்டிற்கு ஏற்ற தீர்மானங்களை எடுப்பதற்கு என்பதனை மறந்துவிடக்கூடாது . நான் லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி மும்மர் கடாபியின் தோளில் கையை வைத்திருந்ததாக கூறப்படுகின்றது. எனினும் இது தொடர்பில் பிரபலமான அந்த புகைப்படத்தில் எனது தோளில் கடாபிதான் கையை வைத்திருந்தார்.