Advertisement

Main Ad

பழைய மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதிக்கு காபட் இடுவதற்கான முன் ஏற்பாடுகள் தற்போது துரிதம்-படங்கள்


இலங்கை அரசாங்கத்தின் நிதி உதவியுடன் மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டுவரும் பழைய மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதியின் வீதி அபிவிருத்திப் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டு வருவதாக மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் களப் பொறியியலாளர் ஏ.லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் ரீ.பத்மராஜாவின் வழிகாட்டலில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் களப் பொறியியலாளர் ஏ.லிங்கேஸ்வரனின் கண்காணிப்பில் இடம்பெற்று வருகின்ற மேற்படி பிரதான வீதியின் வீதி அபிவிருத்திப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு முடியும் தருவாயில் காணப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் குறித்த பிரதான வீதிக்கு காபட் ஈடுவதற்கான முன் ஏற்பாடுகள் தற்போது துரிதமாக இடம்பெறுகின்றது.

குறித்த வீதி இரண்டு வழி போக்குவரத்து செய்யக் கூடிய வகையில் அமைக்கப்பட்டு வருவதோடு மேலதிகமாக சைக்கிள் மற்றும் செல்லக்கூடிய வகையில் ஒரு வழியும்,வடிகாணும் அமைக்கப்பட்டு வருகின்றது.

இவ் வீதி மிக நீண்ட காலம் புனரமைப்பு செய்யப்படாமல் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.