Advertisement

Main Ad

மாணவர்கள் ஒழுக்கமுடன் கடமைகளைச் செய்கின்ற போது உரிமைகள் தானாகவே கிடைக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் அப்துல் அஸீஸ்


சர்வதேச சிறுவர் தினத்தினை நாம் நினைவு கூறுகின்ற இவ்வேளையில் மாணவர்கள் எவ்வித பாரபட்சமுமின்றி வீட்டுச் சூழலில் பெற்றோர்களாலும், பாடசாலைச் சூழலில் ஆசிரியர்களாலும் வழிநடாத்தப்பட வேண்டும். மாணவர்கள் ஒழுக்கமுடன் கடமைகளைச் செய்கின்ற போது உரிமைகள் தானாகவே கிடைக்கும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார். 



காத்தான்குடி அல்ஹிறா வித்தியாலயத்தில் அதிபர். ஏ.ஜி.எம். ஹக்கீம் தலைமையில் இன்று நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வின் போது சிறப்புரையாற்றிய அஸீஸ் அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது, 

உரிமையும், கடமையும் ஒரு பிள்ளைக்கு இரண்டு கண்கள் போன்றது. ஒரு குழந்தை
 தாயின் கருவறையிலிருந்து சுதந்திரமாகப் பிறக்கிறது. அக்குழந்தை பசிக்காக அழுகின்ற போது உணவுக்கான உரிமை தாயப்பால் மூலம் கிடைக்கிறது. 

அக்குழந்தைக்கு ஆடை அணிவிக்கின்ற போது பாதுகாப்புக்கான உரிமை கிடைக்கிறது.

பிள்ளை வளர்ந்து பாடசாலைக்கு அனுப்பும் போது கல்விக்கான உரிமை கிடைக்கிறது. இவ்வாறு சிறுவர் உரிமை பதினெட்டு வயது வரைக்கும் இயல்பாகவே இருக்கின்ற விடயம். பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் நல்ல வார்த்தைகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுடன் அவர்களது இலட்சய வாழ்வுக்கு தன்னம்பிக்கையையும், பாராட்டுக்களையும் ஒவ்வொரு விடயத்திலும் செய்ய வேண்டும். சிறுவர்கள் செய்யும் தவறுகளுக்கு தண்டனை வழங்கும் கலாசாரத்தை கைவிட்டு அவர்களை நல்வழிப்படுத்த மனம் விட்டு பெற்றோர்கள் பேசி அவர்களை நண்பர்களாக பழக வாய்ப்பளி;க்க வேண்டும். ஒவ்வொரு சிறுவர்களும் இதனை பெற்றோரிடமிருந்து எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் இப்படியான பிள்ளைக்கு உடல், உள வேதனைகளைக் கொடுக்கும் அளவுக்கு பிள்ளையை அதட்டுதல், முறையற்ற தொடுகை, புறக்கணித்தல் மற்றும் பாடசாலைக்கு அனுப்பாமை போன்ற விடயங்கள் அவர்களின் உரிமையயை துஸ்பிரயோகம் செய்யும் விடயங்களாகும். இக்குற்றங்களைச் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம் மேற்கண்டவாறு அஸீஸ் தெரிவித்தார். 

இந்நிகழ்வின் போது பிரதேச கல்வி;ப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். பதுறுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும், நினைவுச் சின்னங்களும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.