சர்வதேச சிறுவர்தின நிகழ்வுகள் நாட்டின் நாலாபுறத்திலும் சந்தோசமாக கொண்டாடப்பட்டாலும் எமது நாட்டில் சிறுவர் துஸ்பிரயோகங்கள் அடுக்கடுக்கடுக்காக நடைபெற்று வருவதை நினைத்துப்பார்க்கும்போது மனதுக்கு கஷ்டமாக இருப்பதாகவும் அரசு இதுவிடயத்தில் கரிசனையுடன் செயலாற்றுவது சற்று திருப்தியாக அமைந்துள்ளதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சர்வதேச விடயங்களுக்கான பணிப்பாளரும் சிம்ஸ் பல்கலைகழக பணிப்பாளர் நாயகமுமான மென்பொருள் பொறியலாளர் அன்வர் எம் முஸ்தபா தெரிவித்தார்.
நேற்று அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்தில் தாறுல் அத்பால் சிறுவர் கழகம் ஏற்பாட்டில் நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவரது உரையில் மேலும் சிறந்த கல்வி மூலம் மட்டும்தான் நம்மை நாம் பூரணப்படுத்திக் கொள்ள முடியும் எனவும் பாடசாலை மாணவர்கள் ஏழ்மையை காரணம் காட்டி திசைதிரும்புவதை தவிர்க்க வேண்டும் எனவும் பல கல்வியலாளர்களை முன்னிறுத்தி விளக்கமளித்தார்.இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலாளர் M. நசீர்,இறக்காமம் பள்ளிவாசல் தலைவர்,சிறுவர் நல உத்தியோகத்தர்,இறக்காமம் பிரதேச சபை செயலாளர்,கோட்ட கல்வி அதிகாரி,பாடாசாலை ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.