Advertisement

Main Ad

34 மொத்தப் போட்டிகளில் 2௦ முதலிடங்கள் பதுளை ப/ பாத்திமா மகளிர் கல்லூரிக்கு..

34 மொத்தப் போட்டிகளில் 2௦ முதலிடங்கள் பதுளை ப/ பாத்திமா மகளிர் கல்லூரிக்கு

ஊவா மாகாண கல்வி திணைக்களத்தால் நடத்தப் பட்ட பதுளை கல்வி வலய ஆங்கில மொழி போட்டிகளில் ப/ பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி முதலிடம் பெற்றுள்ளது. 
"ப்லூமிங் பட்ஸ்" என்ற தலைப்பில் மொத்தம் 34 போட்டிகள் நடத்தப் பட்டு அதில் 2௦ போட்டிகளுக்கான முதலாம் இடங்களையும், ௦3 (மூன்று) இரண்டாம் இடங்களையும், ௦3 (மூன்று) மூன்றாம் இடங்களையும் பெற்று மொத்தமாக 26 போட்டிகளில் தமது திறமைகளை காட்டி சாதனை படைத்துள்ளனர்.
கடந்த 2௦௦9ம் ஆண்டு பல சவால்களுக்கு மத்தியில் ஆரம்பிக்கப் பட்ட இப்பாடசாலை ஊவா மாகாணத்தின் முதலாவதும் ,ஒரேயொரு முஸ்லிம் கல்லூரியுமாகும். பல துறைகளில் தமது திறமைகளை காட்டி , சாதனைகள் படைத்துவரும் இக்கல்லூரி மாகாண கல்வியமைச்சின் , கல்வி திணைக்களத்தின் உயரதிகாரிகளின் மற்றும் பெற்றார்களின் நன்மதிப்பை பெற்ற கல்லூரோயாகும் என்பது குறிப்பிடத் தக்கது