Advertisement

Main Ad

மலசல கூட குழியில் விழுந்து 3வயது 2 மாத சிறுமி மரணம்- காத்தான்குடியில் சம்பவம்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி ஜன்னத் மாவத்தையில் பாத்திமா ரஜா எனும் 3வயது 2 மாத சிறுமி தனது பெரியம்மாவின் வீட்டில் புதிதாக கட்டப்பட்ட மலசல கூட குழியில் விழுந்து மரணமாகியுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.


மேற்படி சம்பவம் நேற்று (30) வெள்ளிக்கிழமை மாலை நேரம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது தனது வீட்டினுள் இருந்து வெளியில் சென்ற குழந்தை திரும்ப வராததை அவதானித்த சிறுமியின் குடும்பத்தினர் வெளியில் சென்று பார்த்தபோது சிறுமியின் பெரியம்மாவின் வீட்டில் சிறுமி நீர் நிரம்பி இருந்த மலசல கூட குழியில் இருந்த நிலையில் மீட்கப்பட்டு காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற நிலையில் அங்கு மரணமடைந்துள்ளது.

2012-08-28 திகதி பிறந்த குறித்த சிறுமியின் சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,பிரேத பரிசோதனையின் பின்னர்; சடலம் (ஜனாஸா) சிறுமியின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.