கிழக்கிலங்கை மாணவர்களுக்கும் தொழில்தேடுனர்களுக்கும் மற்றுமொரு வாய்ப்பாக சேம்ஸ் லங்கா கொள்டிங்க்ஸ் (SAMS Lanka Holdings (Pvt)Ltd) நான்காவது தடவையாக உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி எதிர்வரும் நவம்பர் 28ம் 29ம் திகதிகளில் சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் வழமைபோல பிரமாண்டமாக இடம்பெற உள்ளது.
கடந்த 3 தடவைகளிலும் பல்லாயிரக்கணக்கான மாணவ,மாணவிகளும் மற்றும் தொழில் தேடுனர்களும் கலந்து கொண்டு பயனடைந்திருந்ததை தொடர்ந்து சர்வதேச பல்கலைக்கழகங்களினதும்,உள்நாட்டு உயர்கல்வி நிருவனக்களினதும் பங்குபற்றலுடன் மிக பிரமாண்டமாக இடம்பெற உள்ளது. தலைநகரில் மட்டுமே இடம்பெற்றுவந்த இக்கண்காட்சியை கிழக்கிலங்கை மக்களின் நன்மைகருதி சேம்ஸ் லங்கா கொள்டிங்க்ஸ் (SAMS Lanka Holdings (Pvt)Ltd) நான்காவது தடவையாக சாய்ந்தமருதில் நடத்த முன்வந்திருக்கிறது.
இக்கண்காட்சி முற்றிலும் இலவசமாக நடைபெற உள்ளது.இக்கண்காட்சியில் பாடசாலை மாணவர்கள், சாதாரண தர,உயர்தர பரிட்சையை முடித்து விட்டு அடுத்த கட்ட நகர்வுக்கு காத்திருப்போர் என சகலரும் பயன் பெறக்கூடியதாக அமைய உள்ளது.
இந்நிகழ்வின் இணைய ஊடக அனுசரனையாளர்கள் வரிசையில் எமது சகோதர இணையமான கூரியர் போய்ஸ் தளம் இணைந்து கொள்கிறது.