
இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவில் குறைந்த வருமானம் பெறும் 100 குடும்பங்களுக்கு 13 இலட்சம் ரூபா பெறுமதியான கூரைத்தகடுகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.
சப்ரகமுவ மாகாண சபை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் யெஹ்யா எம். இப்லாருக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இவை வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வு இரத்தினபுரி பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.