Advertisement

Main Ad

நான்கு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை...



நான்கு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாயம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆய்வு அமைப்பினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா, கேகாலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே இந்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

 மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, ஊவா, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளில் பிற்பகலில்  இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம்  அறிவித்துள்ளது. சில பகுதிகளில் கடுமையான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது. இடி, மின்னல் தாக்குதல்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்க மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.