(க.கிஷாந்தன்)
ஆயிரம் ரூபா சம்பளம் கோரி நான்காவது
நாளான 09.07.2015 அன்றும் மெதுவான பணி செய்யும் தொழில் தொழிலாளர்கள் ஈடுப்பட்டதோடு
சில பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முதலாளிமார் சம்மேளனத்திற்கும்
கூட்டு ஒப்பந்தத்தில் பேச்சுவார்த்தை நடத்தும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் உடனடியாக
பேச்சுவார்த்தினை நடத்தி உடனடியாக ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுதருமாறு தொழிலாளர்கள்
ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை அக்கரப்பத்தனை பெரிய நாகவத்தை
தோட்டத்தை சேர்ந்த 250ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளத்தை கோரி
09.07.2015 அன்று காலை 10 மணியளவில் குறித்த தோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இவ் ஆர்ப்பாட்ட பேரணி பெரிய நாகவத்தை
தோட்டத்திலிருந்து மன்றாசி நகரம் வரை நோக்கி சென்று அங்கு மேற்படி தோட்ட பிரதான வீதியை
மறைத்து பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி, டயர்களை எரித்து தோட்ட கம்பனிக்கு எதிராக
ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனால் பல மணிநேரம் குறித்த தோட்டத்திற்கான
போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டிருந்தது.
சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டகாரர்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர். அதன் பின் கலைந்து சென்றனர்.










