Advertisement

Main Ad

லிந்துலையில் சிறுவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் ( படங்கள் இணைப்பு )

(க.கிஷாந்தன்)


லிந்துலையில் சிறுவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து அப்பிரதேசத்தை சேர்ந்த 300ற்கும் மேற்பட்ட மக்கள் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு 09.07.2015 அன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை டயகம தலவாக்கலை பிரதான வீதியில் லிந்துலை அவரபத்தன சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் 6ம் தரத்தில் கல்வி கற்கும் 3 மாணவர்கள் 08.07.2015 அன்று பிற்பகல் 2 மணியளவில் பாடசாலை முடித்து வீட்டுக்கு செல்லும் பொழுது அப்பகுதியில் உள்ள வீட்டுக்கு முன்னால் கிழே கிடந்த விரலிக்காய் சாப்பிடுவதற்காக அவற்றை பொறுக்கியபோது குறித்த வீட்டில் உள்ள உரிமையாளர் 3 மாணவர்களையும் கேபல் வயரினால் கட்டி வைத்திருந்த போது அப்பகுதி பிரதேச மக்களுக்கு தகவல் கிடைத்ததையடுத்து 3 மாணவர்களையும் காப்பாற்றி தங்களது பாதுகாப்பில் வைத்திருந்து லிந்துலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அப்பிரதேசத்தில் உள்ள மூவர் சம்மந்தப்பட்ட சிறுவர்கள் தாக்கப்பட்டதை கண்டதாக பொலிஸில் புகார் செய்தனர். அதனையடுத்து சம்மந்தப்பட்டவர் கைது செய்யப்பட்தோடு மேற்படி மூன்று சிறுவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக பொலிஸார் சேர்த்துள்ளனர்.

அத்தோடு கைது செய்யப்பட்ட நபரை லிந்துலை பொலிஸார் நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றார்கள்.

எனினும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவவர்கள் சம்மந்தப்பட்ட நபருக்கு நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக தெரிவித்தனர்.

லிந்துலை பொலிஸாரின் தலையீட்டின் பின் ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.