Advertisement

Main Ad

சீனாவை தாக்க இருக்கும் அதிவேக புயல்கள்: ரெயில் சேவை நிறுத்தம்- பள்ளிகளுக்கு விடுமுறை

சீனாவில் அடுத்தடுத்து இரண்டு அதிவே புயல் தாக்க இருப்பதால் ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

லிங்பா என்ற புயல் தெற்கு மாகாணமான குவாங்டாங்கை இன்று தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சான்-ஹொம் என்று சக்தி வாய்ந்த புயல் கடற்கரை பகுதியான புஜியான் அல்லது செஜியாங் பகுதியில் நாளை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு அதிவேக புயலும் கரையை கடக்கும் நேரத்தில் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் வர்த்த நகரமான ஷாங்காயில் இருந்து தெற்கு பகுதிக்கு செல்லும் அனைத்து ரெயில்களும் வெள்ளி மற்றும் சனிக்கிழமை நிறுத்தப்படுகிறது.

குவாங்டாங் மாகாணத்தில் உள்ள 15 கவுன்ட்டியில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் பொதுவாக தென் சீன கடற்பகுதியல் புயல் உருவாகுவது வழக்கமானதுதான். இந்த புயல் காற்றில் கடல் நீர் ஊருக்குள் புகுந்து சேதத்தை விளைவிக்கும்.