Advertisement

Main Ad

நியாயமான சம்பளம் கிடைக்காவிடின் இவ்வாறான மெதுவான பணிகளில் ஈடுப்படுவதை எவராலும் நிறுத்தவோ? தடுக்கவோ? முடியாது - ஆறுமுகன் தொண்டமான்.

(க.கிஷாந்தன்)

பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும், கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களுக்குமிடையே இடம்பெற்ற சம்பள பேச்சுவார்த்தையில் சுமுகமான ஒரு தீர்மானம் கிடைக்காத காரணத்தினால் அடுத்த கட்ட நடவடிக்கையாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் மலையக பெருந்தோட்ட மெங்கிலும் மெதுவான பணிகளில் தொழிலாளார்கள் ஈடுப்படுகின்றனர்.

அந்தவகையில் மெதுவான பணிகளில் ஈடுப்பட்ட தொழிலாளர்களை சந்திக்கும் முகமாக அக்கரபத்தனை, டயகம, டிக்கோயா ஆகிய தோட்டப்பகுதிகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் கட்சியின் தலைவர் முத்து சிவலிங்கம் ஆகியோரின் தலைமையிலான குழு விஜயமொன்று மேற்கொண்டு பார்வையிட்டனர்.

தொடர்ந்து தோட்ட தொழிலாளர்களுக்கு இ.தொ.கா கேட்டுள்ள நியாயமான சம்பளம் கிடைக்காவிடின்  இவ்வாறான பொதுவான பணிகளில்  ஈடுப்படுவதை எவராலும் நிறுத்தவோ? தடுக்கவோ? முடியாது எனவே உறுதியான சம்பளம் எப்போது கிடைக்குமோ அதுவரைக்காலம் மெதுவான பணிகளில் ஈடுப்படவேண்டுமென இ.தொ.காவினால் தொழிலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. 

இதன்போது பொதுச் செயலாளர் உள்ளிட்ட, இ.தொ.காவின் தலைவர் முத்து சிவலிங்கம், இ.தொ.காவின் உப தலைவர்கள், பிராந்திய இயக்குனர்கள்,  மற்றும் இ.தொ.கா வின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.