Advertisement

Main Ad

'தேயிலையைப் பாதுகாக்க, தேயிலை சார்ந்த சமூகத்தைப் பாதுகாக்க வேண்டும்' அமைச்சர் திகாம்பரம்

(க.கிஷாந்தன்)

'தேயிலைத் தொழிலை நிலைத்திருக்கச்செய்தல்' எனும் தொணிப்பொருளில் தெரிவுசெய்யப்பட்ட பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் சிறுதோட்ட உரிமையாளர்கள் மற்றும் தேயிலைத் தொழில் துறையினருக்கான மாநாட்டு கொழும்பு வோட்டர்ஸ் எட்ஜ் விருந்தகத்தில் 10-7-2015 நடைபெற்றது.  
சமூக அபிவிருத்தி நிறுவகம், சுயிஸ் தொழில் உதவி நிறுவனம் இணைந்து UTZ தரச்சான்றிதழை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில்,

பிரதம அதிதியாக கலந்து கொண்டு பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் ஆற்றிய உரை……

சுமார் இருநூறு வருடகால வரலாறு கொண்ட இலங்கைத் தேயிலை தொழில்துறையின் பின்னணியில் ஒருமக்கள் சமூகமும் இலங்கையில் வாழ்ந்து வருகிறார்கள். தேயிலையையும் அந் மக்களையும் பிரித்து பார்ப்பதுஎன்பது கடல்நீரில் இருந்து ப்பினை பிரித்துப் பார்ப்பதற்கு ஒப்பானது. அவர்கள் தேயிலையுடன் இரண்டரகலந்து வாழ்பவர்கள். தேயிலைக்கான ருவுணு எனும் சான்றிதழை ஊக்குவிக்கும் இந்த நிகழ்வில் அந்ததேயிலை உற்பத்தியின் து}ண்களாக இருக்கும் மக்கள் சமூகத்தின் பிரதிநிதியாகவே நான் கலந்துகொள்கிறேன். 

என்னை இந்த நிகழ்வுக்கு பிரதம ிருந்தினராக அழைத்தமைக்காக ஏற்பாட்டாளர்களான சமூக அபிவிருத்திநிறுவனத்துக்கும் அதன் தலைவர் ிரு.முத்துலிங்கம் அவர்களுக்கும் எனது நன்றிகளைத்தெரவத்துக்கொள்கின்றேன்.

அதன் ஒரு அங்கமாகவே  இங்கே பேசப்படும் ‘தேயிலைத் தொழிலை நிலைத்திருக்கச் செய்தல்’முக்கியத்துவம் பெறுகிறது. 

அடுத்ததாக உலகம் முழுவதும் தேயிலைத் தொழில் துறையின் பின்னணியில் ஒரு மக்கள் சமூகம்உழைப்பாளர் சமூகமாக வாழ்ந்துவருகிறார்கள். குறிப்பாக இலங்கையில் மத்திய மலைநாட்டுப் பிரதேசத்தில்இந்த உழைப்பாளர் சமூகம் இலங்கைக்கு தேயிலையைக் கொண்டு வந்த ிரித்தானியர்களால் கூலிகளாகவேஅழைத்துவரப்பட்டவர்கள். 

இன்று தங்களை ‘மலையக மக்கள்’ என அடையாளப்படுத்தும் இவர்களில் ொழிலாளர் படைகுறைவடைந்துகொண்டு வருகின்றது. இதனால் பெருந்தோட்டத் தேயிலைத் தொழில் துறையும் சரிவைநோக்கியே பயணிக்கிறது. காரணம் இந்த மக்களின் உழைப்புக்கு ஏற்றத் தொழிலாக ந்தத் தொழில் துறைஅமையவில்லை. இன்றும் கூட ‘நாட்கூலி’ முறையிலேயே இவர்களுக்கான சம்பளம் தீர்மானிக்கப்படுகின்றது. அதற்காக ன்றும்கூட போராடிக் கொண்டிருக்கிறார்கள். சில தொழிற்சங்கங்கள் இந்த ஒப்பந்தத்தை வைத்து பிழைப்பு நடாத்துகிறார்கள்.

இந்தப்பின்னணியில்> நவீன உலகத்தின் வளர்ச்சிக்கும்> வேகத்திற்கும் ஈடுகொடுக்க முடியாத தேயிலைத்தொழில் சார்ந்த உழைப்பாளர் சமூகம் வேறு தொழில்களை நாடிச் செல்கின்றனர். உழைப்புக்கான ஊதியமும்தொழில் கெளரவமும் இன்றைய மக்களின் தேவையாக உள்ளது. எனவே அவர்கள் வெளியேறத்தொடங்குகிறார்கள். அதேநேரம்> மாற்றுத் தொழில் தெரியாதவர்கள் வெளியேற முடியாதவர்கள் தொடர்ந்தும்வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்படுகிறார்கள். இலங்கையின் தேயிலைத் ொழில் துறையில் ஈடுபடும்தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துகொண்டு செல்வது தேயிலைத் தொழிலைப் பாதிக்கும்.
 
தேயிலைத் தொழிலை பொறுப்பேற்ற கம்பனிகள் அந்த தேயிலை வளரும் லைப்பகுதிகளில் தேயிலைத்தவிர்ந் பிற உற்பத்திகளிலும் செயற்பாடுகளிலும் தமது வருமானத்தை ஈட்டத் தொடங்கிவிட்டன. குறிப்பாகமரங்களை வெட்டி விற்பனை செய்தல் பாரிய அச்சுறுத்தலாக உள்ளது. இது தேயிலைத் தொழில் துறைக்குமாத்திரமல்ல பசுமை உலக கோட்பாட்டுக்கும் அச்சுறுத்தலாகும். தேயிலைப்பயிர்களிடையே மிளகு> ராம்புபோன்ற திரவியங்களை இடைப்பயிர்ச்செய்கை செய்வதன் மூலம் ருமானம் பெறுகிறார்கள். அது தவறல்லஅதனை உற்பத்தி செய்யலாம்> ஆனால் தேயிலையை கைவிட்டு திரவியப் பயிர்ச் செய்கைக்கு மாறுவதுஎன்பது தேயிலைத் தொழிலின் முக்கியத்துவத்தை குறைப்பதும் அதில் டுபட்டிருந்த தொழிலாளர்களைகைவிட்டநிலைமையாகவும் அமைந்துவிட்டது. மாத்தளை மாவட்டத்தில் உள்ள தோட்டங்களில் இந்தநிலைமையை பரவலாக அவதானிக்கலாம்.
தோட்டக்கம்பனிகள் தமது செலவுக் கணக்கில் முகாமைத்துவ செலவினங்களை அதிகம் காட்டுகின்றன.அதேநேரம் செலவுக்குறைப்பு முறையாக அநேக தேயிலைத் தொழிற்சாலைகளை மூடிவிடுகின்றன. தேயிலையின் மீள் நடுகை குறைந்து வருகின்றது. இவை யாவும் தேயிலைத் தொழிலின் நிலைத்திருத்தலுக்குஅச்சுறுத்தலாகவுள்ளன.

இங்கே கூடியிருக்கும் பேராளர்களிடம்  ஒரு முக்கியமான விடயத்தை முன்வைக்க விரும்புகின்றேன். நீங்கள்தேயிலையை நிலைத்திருக்கச் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறீர்கள். நாங்கள் அந் தேயிலையில்தங்கிவாழும் மக்களின் நிலைத்திருத்தல் பற்றி அக்கறை கொள்கின்றோம். எமது இலக்கு ஒன்றுதான். உங்களது இலக்கினை அடைய அங்குள்ள மக்கள் நிலைத்திருக்க வேண்டும்.. அவர்களே தேயிலைத்தொழிலின் உயிர்நாடி என்பதை மறந்துவிடக்கூடாது. நிலம் இருக்கிறது. அதில் பாரிய முதலீடுசெய்யப்பட்டிருக்கிறது. உங்களது ுயற்சியில் அதனை நடாத்துகின்றீர்கள்.. அதன் போது தொழிலைநடாத்திச் செல்ல உழைப்பாளர் படை என்பது மக்களாக உள்ளனர். அவர்களை கூலிக்கு உழைக்கும்யந்திரமாக எண்ண முடியாது. தேயிலைத் தொழிலின் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தினையும் தங்கியிருப்பவர்களின் வாழ்க்கை தரத்தினையும் உயர்த்துவதன் மூலமே தேயிலையின் தரத்தையும் உயர்த்திதேயிலையை நிலைத்திருக்க செய்யமுடியும் என உறுதியாக நம்புகின்றேன் என தெரிவித்தார்.

சமூக அபிவிருத்தி நிறுவன தலைவர் பெ.முத்துலிங்கம், தேயிலை ஆராய்ச்சி நிறுவன முன்னாள் பணிப்பாளர் சியாட் மொஹமட், இலங்கைத் தேயிலைச் சபையின் பணிப்பாளர் நாயகம் அனுர சிரிவர்தன, சொலிடேரியட் நிறுவன ஆலோசகர் சஜி கடாவில், சுவிஸ் தொழில் உதவி நிறுவன வதிவிடப்பிரதிநிதி டேனியல் புரன்கோல், தேயிலை தரகு வர்த்தக சங்க பிரதிநிதி அணில் கூக்,  பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி, ஆகியோரும் நிகழ்வில் உரையாற்றினர்.