Advertisement

Main Ad

சாய்ந்தமருதில் ழுழுமையான ஹர்த்தால் அணுஸ்டிக்கப்பட்டது ழுழு விபரம் இணைப்பு ( படங்கள் இணைப்பு )


( முஹம்மட் றின்ஸாத் )

இன்று (15.06.2015) ம் திகதி சாய்ந்தமருது நகரசபை கோரிக்கைக்காக சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக ஆயிரக்கனக்கான பொது மக்கள் கூடி அமைதியான முறையில் தங்களது  நகரசபை கோரிக்கையினை முன்வைத்தார்கள்.

அது மாத்திரம் இன்றி சாய்ந்தமருது பிரதேசத்தில் அனைத்து அரச நிருவணங்கள் உட்பட சகல தனியார் மற்றும் ஏனைய நிருவணங்களும் ழுழுமையாக முடப்பட்டு ஹர்த்தால் அணுஸ்டிக்கப்பட்டதை காணக் கூடியதாக இருந்தது .

இன்னும் பள்ளிவாசலுக்கு முன்பாக கூடியிருந்த சாய்ந்தமருது மக்களின் கைகளில் மற்றும் பள்ளிவாசல் சுவர்களிலும்
""அனுமதி இல்லை அனுமதி இல்லை எமது உள்ளுராட்சி சபையை தடுத்த அரசியல் வாதி எவருக்கும் சாய்ந்தமருது வர அனுமதி இல்லை ""
இன்னும் ""சாய்ந்தமருது மக்கள் கண்ணீர் வடிக்கிரார்கள் தன் முகவரி கேட்டு "" போன்ற பதாதைகளை காணக்கூடியதாக இருந்தது.

எது எவ்வாராக இருந்தாலும் சாய்ந்தமருது மக்கள் தங்களது நகரசபை கோரிக்கையினை நிறைவேற்றப்படும் வரை தங்களது கோரிக்கையில் இருந்து விலகுவதாக தெரியவில்லை.