அண்மையில் நேபாளத்தில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக எவரெஸ்ட் சிகரம் 3 செமீ. அளவுக்கு நகர்ந்துள்ளதாக சீன புவியியல் கண்காணிப்புத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
சீன புவியியல் கண்காணிப்பு தகவல் மையம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின்படி, கடந்த பத்தாண்டுகளில் உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட், 40 செமீ தூரத்திற்கு நகர்ந்து இருந்ததாகவும், ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதியில் இருந்து மே மாதம் 12 ஆம் திகதி வரையில் நேபாளத்தில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக 3 செமீ அளவுக்கு, மேலும் நகர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்திற்கு சுமார் 9000 பேர் பலியாகினர். பல இலட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்தனர்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இமயமலைப் பகுதியில் தொடர் அதிர்வுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
இதனால் எவரெஸ்ட் சிகரத்திற்கு மலையேறும் வீரர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
