|
இன்று அமைச்சரவையில் ஸ்ரீ.ல.முஸ்லீம் காங்கிஸ் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் அகில இலங்கைமக்கள் காங்கிரஸ் சார்பாகபதில் அமைச்சர்அமீர் அலியும் இணைந்து பாராளுமன்ற தேர்தல் 20வது அரசியல் அமைப்பு தொடர்பாக கடும் சமா.
இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அகில இலங்கைமக்கள் காங்கிரசின் தவிசாளர் பதில் அமைச்சர் அமீர் அலியும் கலந்துகொண்டு அமைச்சரவையில் 20வது தேர்தல் விடயத்தில் சிறுபான்மைக் கட்சிகளும் சிறுபான்மைச் சமுகங்களுக்கும் அநீதி இழைக்கப்படுவதாக வாதிட்டு தமது ஆட்சேபனையும் தெரிவித்தனர்.
அத்துடன் 18 சிறுபான்மைக் கட்சிகள் இதனைஎதிhப்பதனையும் அவர்கள் ஒட்டுமொத்தமாக இதனை எதிர்ப்பதாகவும் அமைச்சரவையில் வாதிட்டனர்.
ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட பாரளுமன்றத் தேர்தல் 20வது அரசியல் அமைப்புசட்டவரைபில் கடும் ஆட்சேபனையை தெரிவித்தனர்.
இச் சட்டவரைபு தொடர்பாக 237 உறுப்பினர்கள் கொண்டு தெரிவு செய்யப்படுகின்ற பாராளுமன்றத்தில் (37) தேசியப்பட்டியலும் 145 தொகுதிமுறையும் 55 உறுப்பினர்கள் மாவட்ட பிரிவு முறைமான தெரிவில் தங்களது கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.
இவ் விவாதத்தில்அமைச்சர்கள் தெரிவித்த இரட்டை வாக்கு முறைமையை அமைச்சர்காளான ராஜித்த சேனாரத்தினவும்,சம்பிக்கரணவக்கவும் ஆகியோரும் இணைந்து விவாத்தில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதி சிறுபான்மை சமுகத்திற்கு அநீதி இழைக்காத முறையில் இதனை நடைமுறையில் எடுக்கப்படும் என்று கூறியபோதிலும் இந்த எதிர்ப்பினை இவர்கள் தெரிவித்தனர். இதில் அமைச்சர் திகாம்பரமும் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுத்தீன் வெளிநாடு சென்றிருந்தமையினால் பதில் அமைச்சராக அமீhஅலி இவ் அமைச்சரவையில் கலந்து கொண்டதாகவும் குறிப்பிடத்த்ககது.
20வது தேர்தல் மறுசீரமைப்பு சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனதலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட அமைச்சரவையில் ஸ்ரீ.ல.மு.காங்கிரசும்,அகில இலங்கை முஸ்லீம் காங்கிரசும் தமது முழுமையான அதிருப்தியை வெளியிட்டது. அத்துடன் இத் சீர்திருத்த்தில் சிறுபான்மைக் கட்சிகளுக்கும் சிறுபான்மை சமுகத்திற்கும் அநீதி இழைக்கப்பட்டுள்தாகவும் வாதாடியது.
இன்றைய அமைச்சரவையில் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம்,அகில இலங்கைமக்கள் காங்கிரஸ் சார்பில் அமைசச்ர் றிசாத்தின் பதில் அமைச்சர் கலந்துகொண்டன அமீர் அலியும் மேற்படிவிடயத்தில் வாதிட்டனர். இதில் அமைச்சர்களான சம்பிக்கரணவாக்க, ராஜித்தசேனாரத்தின ஆகியோருக்கிடையில் வாதங்கள் இடம்பெற்றன.

