Advertisement

Main Ad

நீர்ப்பாசன விவசாய பிரதிஅமைச்சர் அனோமா கமகேயின் அம்பாரை மாவட்ட தமிழ் பிரதேசங்களுக்கான இணைப்பாளராக அம்பாரை மல்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த வி. வினோ காந்த்

எஸ்.அஷ்ரப்கான்)

நீர்ப்பாசன மற்றும் விவசாய பிரதிஅமைச்சர் டாக்டர் அனோமா கமகேயின் அம்பாரை மாவட்ட தமிழ் பிரதேசங்களுக்கான இணைப்பாளராக அம்பாரை மல்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த வி. வினோ காந்த் இன்று (01) பிரதி அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் புதிய வளத்தாப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்டவர். மிக நீண்டகாலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் வளர்ச்சிக்கு அம்பாரை மாவட்டத்தில் பெரும் சிரத்தையுடன் செயலாற்றி வருகின்றார்.

இவரது நியமனம் மூலம் அம்பாரை மாவட்ட தமிழ் பிரதேசங்கள் எதிர்காலத்தில் பெரும் அபிவிருத்தி காணும் என்பதில் ஐயமில்லை.