Advertisement

Main Ad

குடிநீர் இணைப்பினைப் பெறுவதற்காக மக்கள் எதிர்கொள்கின்ற அசௌகரியங்களை உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் இல்லாமல் செய்ய வேண்டும்

குடிநீர் இணைப்பினைப் பெறுவதற்காக மக்கள் எதிர்கொள்கின்ற அசௌகரியங்களை உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் இல்லாமல் செய்ய வேண்டும்


குடிநீர் இணைப்பினைப்பெற சுமார் 8பக்கங்கள் கொண்ட ஒரு விண்ணப்பத்தினை நிரப்பி அதனுடன் கிராம சேவகருடையசான்றிதல், சமாதான நீதவானுடைய கையொப்பம் இரண்டு சாட்சியாளர்கள் ஒப்பம், அடையாள அட்டைப்பிரதி, காணிப்பத்திரம் போன்ற தகவல்களைத்திரட்டி குறித்த விண்ணப்பத்தினை நிரப்பி முடிப்பதற்கு கிராமமக்கள் படும் அவஸ்தை சொல்லொணாத் துயராகும்.

முறையாக விண்ணப்பங்களை எழுதி நிரப்பத் தெரியாத கிராமமக்கள் பஸ் ஏறி நகர்ப்புறங்களில் உள்ள படித்தவர்களையும் தம் உறவினர்களையும் அணுகவேண்டியுள்ளது. கிராமங்களில் கடமைபுரியும் இதுதொடர்பான சில உத்தியோகத்தர்களும் கிராமசேவை உத்தியோகத்தர்களும் படிக்கத் தெரியாத வயதான கிராமிய மக்களுக்கு இவ்வாறான விண்ணப்பங்களை நிரப்பிக்கொடுக்கின்ற உதவிகளைக்கூடச் செய்யாமல் மக்களை விண்ணப்பங்களோடு அலையவிடுவதைக் காண்கிறோம்.

சாதாரணமாக படித்த எழுதுனருக்கே சில விண்ணபங்களை நிரப்புவது கஷ்டமாக இருக்கின்ற போது, ஏனைய மக்களுக்கு இது மாபெரும் சிரமம் என்பதை சொல்லவேண்டிய அவசியமில்லை
இவ்வாறான அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு  அத்தியவசியச் சேவைகளை மக்கள் இலகுவாகப் பெற்றுகொள்வதற்கான வகையில் குறிப்பிட்ட ஓரிரு ஆவணங்கள் மூலம் சேவைகளை இலகுபடுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென கிராமிய மக்கள் சார்பாய் தயவாய்க்கேட்டுகொள்கின்றோம்.

எச்.ஜே.எம்.இன்ஹாம்
எதிர்கட்சித்தலைவர் பிரதேச சபை
அக்கரைப்பற்று