(முஹம்மட் ஜெலீல், எஸ்.எல்.எம்.றாபி )

நிந்தவூர் அல் அதான் வித்தியாலயத்தின் தரம் ஒன்றிற்காக மாணவர்களை சேர்க்கும் ஏடுதுவக்க விழா பாடசாலை அதிபர் ஏ.எம்.சலீம் தலைமையில் இன்று 27.01.2015ம் திகதி நிந்தவூர் அல் அதான் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலையக் கல்விப் பணிமனையின்
திட்டமிடல் பிரிவின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.எம்.வை.அறபாத், ஆரம்பப்
பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். ஜஹாங்கீர், வைத்திய
அதிகாரி டாக்டர் ஏ.எம்.ஜாபிர், கிழக்கு பல்கலைக் கழகத்தின் பேரவை
உறுப்பினர் பி.ரி.ஹசன், ஓய்வு பெற்ற நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எல்.
ஜுனைடீன், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.எம். நௌஷாட், அல் மதீனா
மஹா வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.அஹமது, ஆசிரிய ஆலோசகர் எம்.வை.நஜிமுன்னிசா
மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஆகியோர்கள் அதிதிகளாக
கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஏடு துவக்கி வைத்தனர்.
இம்முறை இந்த பாடசாலையில் 91 மாணவர்கள் முதலாம் தரதிற்காக சேர்த்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இம்முறை இந்த பாடசாலையில் 91 மாணவர்கள் முதலாம் தரதிற்காக சேர்த்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.