Advertisement

Main Ad

வெள்ளை மாளிகையின் புல் வெளியில் விழுந்து கிடந்த சிறியரக விமானம்...



அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, தனது மனைவி மிச்செலியுடன்  3  நாள் பயணமாக இந்தியா சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் உள்ள  திங்கள் கிழமை அதிகாலை  வெள்ளை மாளிகையின் தெற்கு பகுதியில் ஒரு மரத்தின் மீது மோதிய சிறிய ரக ஆள் இல்லா விமானம் ஒன்று  புல்வெளியில்  விழுந்து கிடந்தது. இது 2 அடி நீளமும் 2 பவுண்ட் எடையும் கொண்டதாக் இருந்தது. இது அரசு அதிகாரிகளால் இயக்கப்பட்டு உள்ளது. ஆனால் ரசகசிய பிரிவால் யார் என அடையாளம் காண முடிய வில்லை.ரேடார்  விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் பெரிய விமானம் போன்ற பறக்கும் பொருள்கள் கண்டறிய வடிவமைக்கப்பட்டுள்ளது. இருந்தும்  அதௌ ரேடாரை மீறி வந்து உள்ளது.

அதிபர் ஒபாமா மகள்கள் சாஷா, மாலியா ஆகியோர் இந்தியா வரவில்லை. பள்ளியில் விடுமுறை கிடைக்காததால் அவர்களால் வரமுடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர்களுடன் பாட்டி மரியன் ராபின்சன் தங்கியிருக்கிறார்.

ஆளில்லா விமானம் விழுந்த போது அவர்கள் இருவரும் வெள்ளை மாளிகையில் இருந்தார்களா? என்ற தகவல் வெளியாக வில்லை. இதற்கிடையே ஒபாமாவுடன் டெல்லியில் இருக்கும் பத்திரிகை செயலாளர் ஜோஸ் எர்னல்டிடம் இது குறித்து நிருபர்கள் கேட்டனர். அப்போது, வெள்ளை மாளிகை வளாகத்தில் ஆளில்லா விமானம் விழுந்தது உண்மைதான் என்றார். அதை ரகசிய பாதுகாப்பு சேவை பிரிவு கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையில் தான் அதிபர் ஒபாமா தனது குடும்பத்துடன் தங்கியுள்ளார். எனவே, அங்கு ஆளில்லா விமானம் விழுந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் டெக்சாசை சேர்ந்த ஒருவன் கத்தியுடன் வெள்ளை மாளிகைக்குள் புகுந்தான். அதை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்து 4 உயர் அதிகாரிகள் நீக்கப்பட்டனர். பாதுகாப்புதுறை முன்னாள் இயக்குனர் ஜூலியா பியர்சன் ராஜினாமா செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்.