Advertisement

Main Ad

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தேசிய பொதுக்குழு 25.01.2015 சாய்ந்தமருது லீ - மெரீடியன் மண்டபத்தில் நடைபெற்றது.

Ashraff.A.Samad


ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் 04வது தேசிய பொதுக்குழு தீர்மானங்கள்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தேசிய பொதுக்குழு 25.01.2015 சாய்ந்தமருது லீ - மெரீடியன் மண்டபத்தில் நடைபெற்றது.


நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர;தலில் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிரிசேன அவர்கள் வெற்றி பெற்று புதிய அரசு அமைந்துள்ள இந்நிலையில்கடந்த ஆட்சியின் போது சிறுபான்மை மக்களுக்கு எதிராக குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற இனவாத தாக்குதல்களுக்குறிய சட்ட ரீதியான நியாயமான தீர்வை இவ்வரசாங்கம் வழங்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கோரிக்கை வைக்கின்றது.


பள்ளிவாசல் விவகாரம்.

1.  1. கடந்த ஆட்சியின் போது முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதல்களில் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு பள்ளிவாயல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இத்தாக்குதலின் மூலம் சுமார் 04 பள்ளிவாயல்கள் முற்றாக மூடப்பட்டுவிட்டன. சிறுபான்மை மக்களின் பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ள இவ்வரசாங்கம். முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு இதுவரை அநியாயமாக மூடப்பட்டுள்ள குறித்த பள்ளிவாயல்களை உடனடியாக தொழுகைக்காக திறந்து விட வேண்டும் என்று இப்பொதுக்குழு கோரிக்கை வைக்கின்றது.

2. இனவாத செயல்பாடுகள் காரணமாக சுமார் 25க்கும் மேற்பட்ட பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டமை நாடறிந்த உண்மையாகும். குறித்த பள்ளிவாயல்கள் அனைத்தையும் கால தாமதமின்றி புணர் நிர்மானம் செய்து தர வேண்டும் என்றும்குறித்த பள்ளிவாயல்கள் மீது தாக்குதல் நடத்தியவர;கள் யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி உடனடி சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இப்பொதுக்குழு வேண்டிக் கொள்கின்றது.

3. அணைந்து மதங்களுக்கும் சம உரிமை வழங்குவதுடன்சிறுபான்மை மக்களாக முஸ்லிம்களின் மதத்தளங்களான பள்ளிவாயல்கள் கடந்த காலங்களில் தாக்கப்பட்ட கசப்பான நிகழ்வுகள் நடந்தமையினால் இனிவரும் காலங்களில் பள்ளிவாயல்களுக்குறிய உரிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும் என்றும் இப்பொதுக் குழு கோரிக்கை வைக்கின்றது.

4. தம்புள்ளையில் அமைந்துள்ள ஜும்மா பள்ளிவாயலை வீதி அபிவிருத்தி என்ற பெயரில் அவ்விடத்திலிருந்து அகற்றிவிடுவதற்கு இனவாத சக்திகள் முயன்று வருகின்றன. இந்நிலையில் தம்புள்ளை ஜும்மா பள்ளிவாயலுக்கு உரிய பாதுகாப்பை அரசு வழங்குவதுடன்குறித்த பள்ளிவாயலின் இருப்பை சட்ட ரீதியாக உறுதி செய்ய வேண்டும் என்றும் இப்பொதுக் குழு வேண்டிக் கொள்கின்றது.

மத்ரஸாக்களுக்கான பூரண சுதந்திரம் வேண்டும்.

5.    5. இனவாத செயல்பாடுகளின் ஒரு அங்கமாக இஸ்லாமிய மார்க்க கல்லூரிகள் - மத்ரஸாக்கள் மீதான இனவாத கருத்துக்களும் பரப்பட்டன. அந்த வகையில் மத்ரஸாக்களை மூட வேண்டும் என்றும்மத்ரஸாக்களை கண்கானிப்புக்குள்ளாக்க வேண்டும் என்றும் இனவாத அமைப்புகள் கடந்த காலங்களில் கோரிக்கை விடுத்து வந்தன. மத்ரஸாக்கள் என்பது மாணவர்களை நல்வழிப்படுத்தும் இஸ்லாமிய வழிகாட்டல்களை வழங்கும் காரியத்தை செய்கின்ற இடமாகும்.  ஆகவே மத்ரஸாக்களுக்குறிய பூரண சுதந்திரமும்பாதுகாப்பும் வழங்கப்படுவதுடன்மற்ற மத பாடசாலைகளுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளும் சளுகைகளும் மத்ரஸாக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று இப்பொதுக் குழு வேண்டிக் கொள்கின்றது.

ர்கா நகர் களவரம்.

6.  6. கடந்த வருடம் தர்கா நகர்அளுத்கமபேருவலை பகுதிகளில் பொது பல சேனாவினால் முன்னெடுக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிராக பாரிய கலவரத்தின் போது இரண்டு முஸ்லிம்கள் கொல்லப்பட்டு சுமார; 1000ம் கோடிக்கும் அதிகமான முஸ்லிம்களின் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு அளிக்கப்பட்டன. குறித்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உரிய நிவாரணங்களை உடனடியாக அரசு வழங்கிஅவர்களின் வாழ்வாதாரத்திற்கு உரிய வழிமுறைகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் இப்பொதுக் குழு வேண்டிக் கொள்கின்றது.

7. தர்கா நகர் கலவரத்திற்கு காரணமான பொது பல சேனா என்ற இனவாத இயக்கத்தை அரசு தடை செய்வதுடன்அதன் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்து சட்ட நடவடிக்கை மூலம் அவருக்கு தண்டனை வழங்குவதற்குறிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் இப்பொதுக்குழு வேண்டிக் கொள்கின்றது.

மீள்குடியேற்றம்.

8. தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத தாக்குதல்களினால் சொந்த ஊரை விட்டும் வெளியேற்றப்பட்டு அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்கள்இன்றும் உரிய உதவிகள் இன்றி கஷ்டப்படும் நிலையே காணப்படுகின்றது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு சொந்த ஊரைவிட்டும் வெளியேற்றப்பட்ட மக்களை உடனடியாக மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்று இப்பொதுக்குழு வேண்டிக் கொள்கின்றது.


பெஷாவர் தாக்குதல்.

9. கடந்த மாதம் பாகிஸ்தான்- பெஷாவர் நகரில் அமைந்துள்ள பாடசாலை மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கின்றது. தெஹ்ரிகே தாலிபான் என்ற அமைப்பிற்கும் அதன் செயல்பாடுகளுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதுடன்தெஹ்ரிகே தாலிபான் அமைப்பின் செயல்பாடுகள் இஸ்லாத்தின் கட்டளைகளுக்கு முற்றிலும் மாற்றமானது என்பதையும் இப்பொதுக் குழு பதிவு செய்கின்றது.

ஷார்லி ஹெப்டோ  தாக்குதல்.

10. இஸ்லாமியர்களாகிய நாம் எமது உயிரை விட அதிகமாக நேசிக்கும் புனிதமிக்க இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மது நபியவர;களை கேலிச் சித்திரமாக வரைந்து மீண்டும் மீண்டும் முஸ்லிம்களின் மத உணர்வுகளை சீண்டிப் பார்க்கும் ஷார்லி ஹெப்டோ என்ற பிரான்ஸ் நாட்டு கேலிப் பத்திரிக்கையின் செயல்பாடுகளை இப்பொதுக் குழு வன்மையாக கண்டிக்கின்றது.

11. இஸ்லாத்திற்கு எதிரான செயல்பாடுகளை யார் செய்தாலும் அவர்களை ஆயுதமேந்தி தண்டிக்கும் அதிகாரம் எந்தவொரு தனி மனிதனுக்கோஅல்லது ஒரு குழுவுக்கோ கிடையாது. இஸ்லாம் இது போன்ற செயல்பாடுகளை ஒரு போதும் அனுமதிக்கவில்லை.

12. ஷார்லி ஹெப்டோ பத்திரிக்கை நபி (ஸல்) அவர்களை கேலி செய்து சித்திரம் வெளியிட்டார்கள் என்பதற்காக அதன் அலுவலகத்தை தாக்கி அங்கிருந்தவர்களை கொலை செய்ய மாபாதக செயலை இப்பொதுக் குழு கண்டிப்பதுடன்இஸ்லாத்திற்கும் இவர்களின் இத்தகைய செயல்பாடுகளுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதையும் இப்பொதுக் குழு இங்கு பதிவு செய்கின்றது.

13.  இஸ்லாத்திற்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு அறிவார்ந்த முறையில் குர்ஆன்மற்றும் நபியவர்களின் வாழ்கை முறைப்படி பதிலளிக்க வேண்டுமே தவிர அதை விடுத்து இது போன்ற தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது இஸ்லாத்திற்கு அவப் பெயரை பெற்றுத் தருமே தவிரவளர்ச்சிக்கு உதவாது என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சி.

14. இலங்கை நாட்டின் சுகந்திரத்திற்காக அரும்பாடுபட்ட இலங்கை ுஸ்லிம் சமுதாயம் இன்று கல்வி ளர்ச்சியில் பின் தங்கிய நிலையே காணப்படுகிறது. முஸ்லிம் பாடசாலைகளின் ஆசிரியர் வளம்கட்டிட வளம் போன்ற குறைபாடுகளும்கடந் கால அரசாங்கங்களின் மாற்றாந்தாய் மனப்பான்மையுமே இதற்குறிய முக்கிய காரணமாகும். கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகிதிகளிலும் அமையப் பெற்றுள்ள முஸ்லிம் பாடசாலைகளின் நிலை மிகவும் பின்தங்கியதாகவே காணப்படுகிறதுஇப்பாடசாலைகளின் அடிப்படைத் தேவைகளின் ெரும்பகுதியை முஸ்லிம் சமுதாயத்தின் தனவந்தர்களே பூர்த்தி செய்யும் நிலை இருக்கிறது இன்னிலையில் இன்னாட்டின் வளர்ச்சிக்கும் சுதந்திரத்திற்கும் அரும்பாடு பட்ட முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்கு ஆளும் அரசு தேவைப்படும் அனைத்து உதவி த்தாசைகளையும் வழங்கி உதவி செய்ய வேண்டும் என்று ப்பொதுக்குழு கோரிக்கை வைக்கிறது.

ஹிஜாப் பிரச்சினை முடிவுக்கு வர வேண்டும்.

15ஹிஜாப் முறை என்பது பெண்களின் கண்ணியத்தையும்ஒழுக்கத்தையும் பாதுகாத்து தூய்மையான சமுதாயத்தை உறுவாக்குவதற்காக இஸ்லாம் காட்டிய வழிமுறையாகும். முஸ்லிம் சமுதாயப் பெண் பிள்ளைகள் ாடசாலைகல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகத்திற்கு செல்லும் போது ஹிஜாப் அணிந்து செல்வதற்கு சில சிங்கள மொழிப் பாடசாலைகளிலும், கிருத்தவ கல்லூரிகளிலும், பல்கலைக் கழங்களிலும் கூட முஸ்லிம் பெண்களுக்கு தடை விதிக்கப் படுகிறது. ஹிஜாப் அணிந்து பாடசாலை முதல் பல்கலைக் கழகம் வரை முஸ்லிம் பெண் பிள்ளைகள் ல்வி கற்பதற்கு செல்ல முடியும் என்பது இலங்கை அரசியல் சாசனிப்படி வழங்கப்பட்டுள்ள மிக முக்கியமான உரிமைகளாகும், இதனை பல சந்தர்ப்பத்தில் உச்ச நீதிமன்றமும் உறுதிப் படுத்தியுள்ளது.

இந்த உரிமையை பரிக்கும் விதமாக செயல்படும் பாடசாலைகள் மற்றும் அதிகாரிகளுக்கு அரசு இது தொடர்பான சட்ட விளக்கங்களை வழங்குவதுடன், சட்டத்தை மீறி செயல்படும் பாடசாலைகள் மற்றும் அதிகாரிகள் மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கோரிக்கை வைக்கின்றது.

 16. மாற்று மொழி பாடசாலைகளுக்கு செல்லும் முஸ்லிம் மாணவ, மாணவியரை ஒரு சில பாடசாலை ஆசிரியர்களும் அதிபர்களும் தமது காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று வற்புறுத்தும் சம்வங்கள் பல கடந்த காலங்களில் பல பாடசாலைகளில் நடபெற்றுள்ளன இஸ்லாமிய மார்க்கத்தை பொருத்த வரையில் யாரும் எவரில் காலிலும் விழுந்து வணங்க கூடாது. அப்படி வணங்குவது இறைவனை மறுக்கும் இணை வைத்தளுக்குறிய குற்றமாகும் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது.

புனிதமிக்க இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் முஸ்லிம் மாணவர்களை காலில் விழுந்து வணங்கச் சொல்வதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது மத உரிமையை பரிக்கும் செயலாகும். இப்படியான மத உரிமைகளை பரிக்கும் ஆசிரியர்கள்அதிபர்கள், அரச ஊழியர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக் குழு அரசை வேண்டிக் கொள்கிறது.