Advertisement

Main Ad

பிரதேச சபை உறுப்பினர் முனாஸின் கோரிக்கையால் நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு..

- பைஷல் இஸ்மாயில் -



வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அட்டாளைச்சேனை கோணவத்தை பிரதேச மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ் கொழும்பு மேமன் சங்கத்திற்கு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (29) இரவு திங்கட்கிழமை இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ் தலைமையில் அட்டாளைச்சேனை கோணவத்தை ஜூம்ஆப் பள்ளிவாயலயில் இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மேமன் சங்கத்தின் அம்பாறை மாவட்ட பிரதிநிதி மௌலவி எம்.பி.பாரிஸ்,அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோகச் செயலாளரும் அதிபருமான எம்.ஐ.எம்.றியாஸ் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்கி வைத்தனர்.