ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

அரசாங்கத்துக்குள் செங்கம்பள வரவேற்புடன் இருந்த அமைச்சர்கள் மைத்திபாலவுடன் கைகோர்க்கும் போது இந்த அரசாங்கத்தாலும் ஜானாதிபதியாலும் தேசத் துரோகிகளாக விளப்பரப் படுத்தப்படுகின்றனர் என மேல் மாகான சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்ச்சியின் அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜி நேற்று செவ்வாய் கிழமை மாலை (30.12.2014) கொழும்பு சங்கமித்த மாவத்தையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்புடனான பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
மத்திய கொழும்பு அமைப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்துக்கு கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள். முன்னால் மேல் மாகான சபை உறுப்பினர் பிரேம்லால் கொஸ்தா. பிரதேச ஐக்கிய தேசியக் கட்ச்சியின் அமைப்பாளர்கள். பிரதேச மக்கள் என எராளமானோர் பிரசன்ன மாயிருந்தனர்.
தொடர்ந்து உரையாற்றிய பைரூஸ் ஹாஜி…. மத்திய கொழும்பை எடுத்துக் கொண்டால் இங்கு வாழ்கின்ற முஸ்லிம். சிங்களம். தமிழ். கிரிஸ்தவம் மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் புரிந்துனர்வுடன் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டே வருகின்றோம். ஆனால் இந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஒற்றுமையாக வாழ்வதை பார்த்தால் அலஜிக் நோய் வந்துவிடுகின்றது. ஒற்றுமையாக மக்கள் வாழ்வதை இந்த அரங்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. அமைச்சர்கள் அரசாங்கத்தோடு கைகோர்த்து இருக்கும் நேரத்தில் அவர்களுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்படும். ஆனால் அவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியில் வந்து விட்டால் அவர்களை தேசத் துரோகிகளாக இந்த அரசாங்கமும் ஜனதிபதியும் முத்திரை குத்திவிடுவார்கள்.
அந்த வகையிலே 10 வருடங்களாக இந்த அரசாக்கத்தின் அமைச்சரவையில் முக்கிய பங்கினை வகித்த ரிஸாட் பதுர்டீன் அன்மையில் ஜனநாயகத்தின் பாதையில் வெளியில் வந்து நிம்தியாக மக்கள் வாழும் அரசாங்கம் ஒன்றினை நாட்டில் அமைப்பதற்காக மைத்திரிபால சிறிசேனவுடன் கைகோர்த்த போது அரசாங்கத்தால் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு அரசாங்கத்துடனே இருந்த அவரை இப்போது அவர்களுடைய பார்வையில் தேசத் துரோகி ஆக்கிவிட்டார்கள். அசாங்கத்துக்குள் நடகின்ற பிரச்சனைகளையும்.. அடக்கு முறைகளையும், ஒற்றுமையின்மை பற்றியும் ஆழமான முறையில் சிந்தித்து வெளியேறி நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதாலேதான் இன்று ரிஸாட் தேசத் துரோகியாக முத்திரை குத்தப்படுகின்றார்.
அதே போலவே எனது நன்பர் ரவூப் ஹக்கீம் மிக நீண்டகாலமாக அலரி மாளிகையில்தான் உட்கார்ந்து கொண்டிருந்தார். அனால் மைத்திரிபாலவுக்கு ஆதரவளிப்பதாக ஊடகங்களுக்கு தெரிவித்தவுடனேயே உடநடியாக அரச ஊடகங்களில் ரவூப் ஹக்கீம் தேச தொரோகி என்றும் கிழக்கை பிரித்து தனி நாடாக்கப் போகின்றார் என்றும் தலைப்புச் செய்திகளாக வெளியிடுகின்றனர். அதேபோலவே இன்று ஹக்கிமின் பாதையில் தமிழ் அரசுக்கட்ச்சியும் சிறந்த முடிவினை நாட்டு மக்களுக்காக எடுத்து மைத்திரிபாலவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். அதனால் இப்போது அரசாங்கம் சொல்கின்றது இவர்கள் எல்லோரும் சில மாதங்களுக்கு முன்பே நட்டை பிரிப்பதற்காக திட்டமிட்டு மைத்திரியுடன் ஒன்று சேர்ந்துள்ளார்கள் என்றும் மீண்டும் நாட்டில் விடுதலைப் புலிகளை உருவாக்கப் போகின்றார்கள் என்ற உண்மைக்கு புறம்பான செய்தியை பெரும்பான்மை மக்களுக்கு மத்தியில் பரப்பச் செய்கின்றனர்.
இலங்கையில் ஏதாவது ஒரு தேர்தல் அறிவிக்கப்படுமாயின் அதே நொடியில் ஐந்து வருடங்களுக்கு முன்னர் இறந்து போன விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தொலைக் காட்ச்சியில் வரத் தொடங்கிவிடுவார். இப்போதெல்லாம் சந்திக்கு சந்தியும், மக்கள் அனேகமாக நடமாடும் இடங்களில்லும் பெரிய அளவிலான திரைகள் வைக்கப்பட்டு பிரபாகரனின் தலையில் காயம் ஏற்பட்டது போன்ற காட்ச்சிகலும் இரத்தம் வழிந்தோடுவது போன்றும் ஐந்து வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற யுத்தக் காட்ச்சிகளை இப்போதும் காட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த நாட்டில் முப்பது வருடங்கள் யுத்தம் நடைபெற்றது பற்றியும் பிரபாகரன் அழிக்கப்படது பற்றியும் மக்கள் தெளிவாக உள்ளனர். புதிதாக திரையில் போட்டுக்காட்டத் தேவையில்லை.
அதேபோல் அரச தொலைக் காட்ச்சிகளிலும் காலை ஆறு மணிதொடக்கம் நல்லிரவு பனிரண்டு மணி வரைக்கும் பிரபாகரனையே காட்டிக் கொண்டிருக்கின்றனர். முஸ்லிம் நிகழ்ச்சியை எடுத்துப் பார்த்தாலும் அவைகள் இப்போது முஸ்லிம் நிகழ்ச்சிகளுக்குப் பதிலாக மஹிந்த நிகழ்ச்சியாக மாற்றமடைந்துள்ளது. இதற்கு முன்பு வீட்டில் இருக்கும் பெண்கள் விருப்பத்தோடு குர் ஆன், ஹதீஸ்களை கேட்பதற்காக வானொலி, தொலைக்காட்ட்ச்சிகளை போடுவார்கள். இப்போது அந்த பக்கமே செல்வதில்லை. நேற்று சிங்களத்தால் ஜனாதிபதி உரையாற்றியவற்றை அடுத்த நாள் தமிழில் மொழிமாற்றம் செய்து மீண்டும் ஒலி,ஒளி பரப்புச் செய்கின்றனர். இப்படி செய்வதை தள்ளி வைத்து விட்டு. ஒருவர் சந்தைக்கு தேவையானவற்றை கொள்வனவு செய்வதற்காக ஆயிரம் ரூபாய்களை எடுத்துச் சென்றால் 375 ரூபாய்களை அரசாங்கத்துக்கு வரியாக செலுத்துவதை முடிவுக்கு கொண்டுவராத இந்த அரசாங்கம் எதைச் செய்தாலும் இந்த நாட்டு மக்கள் மைத்திரிபாலவை ஜானாதிபதியாக்கும் முடிவினை எப்போதோ எடுத்து விட்டார்கள் என தெரிவித்தார்.
பைரூஸ் ஹாஜியினுடைய விரிவான உரையின் காணொளியினை எமது இணைய நாளித வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வீடியோ 01 பைரூஸ் ஹாஜியின் உரை :
youtube.com/watch?v=gZrydlfFYUE
வீடியோ 02 பைரூஸ் ஹாஜியின் உரை :