பைஷல் இஸ்மாயில்-
வெள்ளம் காரணமாக ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
பலத்த
மழையினாலும் கலியோடை ஆற்றினாலும் ஏற்பட்ட வெள்ளி பெருக்கினால் ஒலுவில்
பல்கலைக்கழகத்திற்குள் வெள்ளம் புகுந்துள்ளதாக தென்கிழக்குப் பல்லைக்கழக
பதிவாளர் எச்.அப்துல் சத்தார் தெரிவித்தார்.
இந்த
ஒலுவில் பல்கலைக்கழக கட்டடங்களுக்குள் சுமார் நான்கு அடி உயரத்திற்கு
வெள்ள நீர் தேங்கிக்கி நிற்பதால் பல்கலைக்கழகத்தின் கல்வி செயற்பாடுகளை
தொடர முடியாத நிலைமையினாலும், மாணவர்களின் பாதுகாப்பு கருதி அவர்களை
விடுதிகளில் தங்க வைக்க முடியாத நிலைமையையையும் கருத்திற்கொண்டு தற்போது
மாணவர்களை விடுதியிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டதாகவும் பரீட்சை
எழுதவுள்ள மாணவர்களுக்கான திகதி தொடர்பான விபரங்கள் பின்னர்
அறிவிக்கப்படும் என தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல்
சத்தார் மேலும் தெரிவித்தார்.