ஒரு கட்சித் தலைவன் ஆவதற்கு முதல் தகமை
தன் உயிர் போனாலும் கட்சி மாறவே மாட்டான் அவன்தான் தலைவன் .தோல்வியோ வெற்றியோ தனது கட்சிக் கோட்பாடுகளுக்கு கட்டுப்
பட்டே இருப்பான்.
இந்த அடிப்படை கோட்பாட்டினைஅறியாத மக்கள்கட்சி விட்டுகட்சி மாறுபவனை ஆதரித்து ஆட்சிபீடம்
ஏற்றுவதினால் தான்பல இக்கட்டானகோளாறுகளை சிறு பான்மை சமூகம் அதிலும் கிழக்கில்
எதிர் கொள்ள வேண்டி உள்ளது.
இங்கு நோக்கப் பட வேண்டியது பிரபாகரன்அவனது கொள்கை சரியோ பிழையோ தன் கொள்கைக் கோட்பாட்டில் பிடியாக நின்றான் ,அதற்க்காக
தன்உயிரைவிட்டான், அவன் தான் தலைவன்.
எங்களில் சில அரசியல் வாதிகள் தலைவனுக்கே
குழி தோன்டி அதனால் விலாசம் இல்லாமலும் போனார்கள்,மேலும் சிலர்
மாற்றான் அதிகாரத்தில் குளிர் காய்பவர்களும் உண்டு.சில அரசியல்வாதிகள் தற்பொழுதுள்ள
தற்காலிக தலைமைக் குழப்பத்தைப் பயன் படுத்தி அதற்குள் தலை நுழைக்கவும் புறப் பட தயாராகி வருகிறார்கள்
. இவ்வாரனவர்களை நம் சிறு பான்மைச் சமூகம் இனம் கண்டு தூர வைப்பது நமது சமூக வரும்
கால சந்ததிகளுக்கு நன்மை பயக்கும்.
மற்றும் பண பலத்தால் உங்களை வீழ்த்தவும் கூடும்,பண பலத்தால் தலைமைப் பதவியோஅல்லது ஆட்சி அதிகாரம் பெற புறப்படுபவர்கள் மீது
மக்கள் முன் எச்சரிக்கையாய் இருக்கும் படி உங்களை வேண்டுகிறேன்
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா