Advertisement

Main Ad

முன்னாள் அமைச்சர் ஏ.ஏச்.எம் அஸ்வர் அவர்களுக்கு கண்டனக் கடிதம்.

அமைச்சுப்பதவி பறிபோன கவலையில் உழறித்திரியும் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்தவின் ஊடக விவகார ஆலோசகராயுள்ள முன்னாள் அமைச்சர் ஏ.ஏச்.எம் அஸ்வர் அவர்களுக்கு கண்டனக் கடிதம்.

இணையத்தில் வெளியான உங்களது ஊடக அறிக்கையில் சிங்கள மக்களிடமும் ஜனாதிபதியிடமும் முஸ்லிம் சமூகம் சார்பாக மன்னிப்புக் கோருவதாக நீர் செல்லியிருந்ததை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் என்றவகையிலும் அக்கரைப்பற்று பிரதேச சபையின் எதிர்க்கட்சித்  தலைவர் என்ற ரீதியிலும் எனது முஸ்லிம் மக்கள் சார்பாக உமது அவ்வறிக்கையினை நான் வன்னமையாக கண்டிக்கிறேன்.
நீர் சும்மாகிடைத்த அமைச்சுப் பதவியை இழந்ததிற்கு இவ்வளவு தூரம் உழறித்திரிய வேண்டியதில்லை இவ்வாறான உழறல்கள் காலப்போக்கில் உம்மை மனநோயாளியாக மாற்றி விடும் என்றே நான் நினைக்கிறேன். கவனம்

முஸ்லிம்களின் இருப்பு பொருளாதாரம், மதச்சுதந்திரம் என்ற கோரிக்கையோடு கடந்த 30வருடத்திற்கு முன்பிருந்தே தொடங்கிய தியாகப் பயணங்களின் சமகால நிகழ்வில் நீர் முஸ்லிம் சமூத்திற்காக என்ன பங்களிபுச் செய்துள்ளீர்?.. ஆட்சிக்கு வரும் அரசைப்பார்த்து யாரையாவது  காட்டிக்கொடுத்து, பொய்யில் படுத்து பொறாமையில் எழுந்து அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொண்டு வருகின்ற உம்மைப்போன்ற  சோம்பேறிகள் முஸ்லிம் சமூகத்தின் பெயரைச்சொல்லி சுகம் அனுபவித்து வருவது வெட்கக்கேடில்லையா? ஏனிந்த நடைமுறை சமூகத்திற்கு ஏதாவது  செய்ய முடியாவிட்டாலும் செய்யத் துணிபவனுக்காவது துணைபோகக் கூடாதா?

முஸ்லிம் சமூத்திற்காக ஒருவேளையாவது பட்டினியை ஆனுபவிக்காமல் துளியேனும் எமது சமூக மக்களின் துன்பங்களில் இரத்தம் சிந்திய வேதனையை உணராமல் சமூகவிடுதலைக்காய் சிறையில் அடைபடாமல்; அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு உயிர் உடமைகளை இழக்காமல்  உம்மைப்போன்ற நடிப்பு நாயகனுகளெல்லாம் தன்னை முஸ்லிம் சமூகம் சார்ந்தவன் சமூகத்தலைவன் என்று சொல்லிக்கொண்டு இஸ்லாத்தின் பெயரில் சாபமிட்டு  அறிக்கைவிடுவதை இத்தோடு நிறுத்திக் கொள்வது நல்லது.

சுமார் ஒரு மாதம் அனுபவித்த அமைச்சுப்பதவியையும் சுகபோகங்களையும் இழந்ததற்கே இப்படி இஸ்லாத்தின் பெயரைச் சொல்லி உம்மால் பிறரை குற்றப்படுத்த முடியுமாக இருந்தால்
எத்தனைவருடமாக  ஓலைக்குடிசைக்குள்ளும் ஓட்டைவீட்டுக்குள்ளும் வாழ்ந்து ஒருகையில் குழந்தையும் மறுகையில் பெட்டியுமாய் தலையில் மூட்டைமுடிச்சுகளோடு அன்றாட வாழ்க்கைதனையே தர்மமாக கேட்டு வாழும் முஸ்லிம் கிராமத்து மக்களின் வாக்குகளை அரசுக்கு கணக்கைக்காட்டி ஓசியில் சோறும் ஏசியும் வாகனமுமாய்  தொப்பை வளர்த்து வாழும் உம்மைப்போன்றோரை நாம்; சாபமிட தமிழில் வசனங்களே போதாதெனக் கருதி நிற்கிறேன்....................

கூலி வேலையில் வருகின்ற பணத்தில் பிள்ளைக்கு கொப்பி வாங்குவதா? கறிவாங்குவதா? என்று மூன்றுவேளை உணவைக் கூட முளுமையாக காணாத நிலையில் மருந்துக்கும் காசுவேணுமே என்னசெய்வது என யோசித்துக்கொண்டிருந்தாலும் ஒவ்வொறு தேர்தலிலும் “முஸ்லிம்” என்ற சப்த்தத்தைக் கேட்ட உடனேயே ஓடிப்போய் நீங்கள் சொன்ன சின்னத்திற்கொல்லாம் வாக்குப்போட்ட எமது கிராமத்து மக்களின் எதிர்பார்ப்புகளை ஏமாற்றிவிட்டு அந்தக் கண்ணீரில் குளித்து அமைச்சர்களாகவும் பிரதி அமைச்சர்களாகவும் உறுபினர்களாகவும் சுகமனுபவித்து வரும் உங்களைப் பார்த்து இடி விழவா திட்டுவது?....

ராசா வீட்டுத் திருமணத்தில் எச்சி புரியாணியைத் தின்கின்ற நாய்கள் “ராசா நமக்காகத்தான் புரியாணி சமைத்திருக்கிறார்” என்ற நினைப்பில் நன்றிக்காய் வாலாட்டிக்குறைக்குமாம். அது போலதான் இன்றைய சூழ்நிலையுpலும்கூட மஹிந்த அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் உம்மைப்போன்ற சில முஸ்லிம் அரசியல் வாதிகளின் அறிக்கைகள் உள்ளது.

சிறுபாண்மையின் விகிதாசாரத்தினை குறைப்பது மாத்திரமன்றி பொதுபலசேன வெனும் சிங்கள இனப்பயங்கரவாதியை வளர்த்து முஸ்லிம்களின் பள்ளிவாயல் தொடக்கம் உயிர் பொருளாதாரம் என அனைத்தையும் திட்டமிட்டு அழித்துவரும் மஹிந்த அரசின் இனவாத நடவடிக்கைகள் உமக்கு வரலாற்றுத் துரேகமாகத் தெரியவில்லையா?.....................

நாட்டில் உள்ள 20லட்சம் முஸ்லிம் மக்களுக்காகவும் தனது உயிரையும் உடமைகளையும் இழந்து இன்று எம்; சமூகத்தின் தியாகியாக அரசை விட்டு வெளியேறிய அமைச்சர் ரிஷாட் பதுருத்தீனையும். அமிர் அலியையும் அவருடன் சார்ந்த ஏனைய முஸ்லிம்; கொள்கைவாதிகளையும் குறைகாண நீர் தகுதியானவனா?.... இஸ்லாத்தின் பெயரில் அவர்களை குற்றப்படுத்த உம்மைப் போன்றவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?...   எமது சமூகத்திற்காக நீர் ஒரு போஸ்டராவது ஒட்டியிருப்பீரா?

. இஸ்லாத்தில் தியாகிகளுக்கு மாத்திரம் தான் முன்னுரிமை என்பதை நீர் விளங்கி தயவு செய்து திருந்தவும். மரணம் சொல்லிவிட்டுவராது அது வரும்வரைக்கும் நாவில் கலிமாவை ஓதிக் கொண்டு இஸ்லாத்திற்கான தியாகங்களைப்பற்றி சிந்தித்து செயல்படவேண்டும் என்று உம்மை அன்பாக வேண்டுகிறேன்.

மேலும் இனிமேலாவது ஏதாவது அறிக்கை விடுவதாக இருந்தால் உமது தனிப்பட்ட பெயரைச்சுட்டி நான் அஸ்வர் சொல்கிறேன் என்று அறிக்கையை விடும்படியும் உம்மைப் போன்ற சமூகச் சண்டாளனுகள் இனி ஒரு போதும் முஸ்லிம் சமூகத்தைத் தழுவியதாக அறிக்கைவிடுவதை நிறுத்த வேண்டுமென்றும் கண்டிப்புடன் கூறுகிறேன்.  

இப்படிக்கு:-
நன்றி  எச்.ஜே.எம் இன்ஹாம்.
எதிர்க்கட்சித் தலைவர் பிரதேச சபை
அக்கரைப்பற்று