Advertisement

Main Ad

எயார் ஏஷியாவின் கறுப்பு பெட்டியினை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது..

Parthiban Shanmuganathan

எயார் ஏஷியாவின் கறுப்பு பெட்டியினை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

எயார் ஏஷியா விமானம் விபத்துக்குள்ளானமைக்கு பொறுப்பேற்றுள்ள  நிறுவனத்தினத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி விபத்திற்கான காரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்..

ஜாவா கடற்பரப்பில் உடைந்து வீழ்ந்ததாக கூறப்படும் எயார் ஏஷியா விமானத்தின் கறுப்பு பெட்டியினை தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கபட்ட தேடுதல் சிலரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் கண்டெடுக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை தொடர்பில் தகவல்கள் வெளியிடப்படவில்லை.

ஏற்கனவே கடலிலிருந்து 40 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.