Advertisement

Main Ad

பல்கலை கழக மாணவர்கள் மிளேச்சத்தனமாக தாக்கப்படுகின்றனர் பைரூஸ் ஹாஜி.. (வீடியோ)

 ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

 

இந்த நாட்டின் ஆணிவேர்களான பல்கலை கழக மாணவர்கள் தங்களுடைய கல்வி உரிமைகளுக்காக ஜனநாயக ரீதியில் குரல் கொடுக்கின்ற பொழுது இந்த அரசாங்கமானது பாதுகாப்பு படையினரையும், பொலிசாரையும் ஏவி விட்டு பல்கலை கழக மாணவர்களை மிளேச்சத்தனமாக தாக்குகின்றனர்.

அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் பிரய்யோகிகப்படுவதும், பெண் மாணவிகள் என கருத்தில் கொள்ளாது அவர்கள் மீது கடுமையான தடியடி பிரயோகமும் மேற்கொள்ளப் படுகின்றது. இது முற்று முழுதாக நாட்டில் உள்ள அனைத்து ஜனநாக உரிமைகளும் பரிக்கப்படுள்ளமைக்கு மிக முக்கிய உதாரணமாகவே நாங்கள் பார்கக் கூடியதாக உள்ளது என மேல் மாகன சபை உறுப்பினர் பைரூஸ் ஹாஜி நேற்று ஞாயிற்றுக் கிழமை (28.12.2014) மாலை மருதானை டீன்ஸ் வீதியில் மைத்திரிபாலவுக்காகன புதிய காரியாலையத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.


மருதானை ஐக்கிய தேசியக் கட்ச்சியின் அமைப்பாளரும் கொழும்பு மாநகர சபை ஊருப்பினருமான கித்சிறி ராஜபக்ஸ்ஸவின் தலையில் திறக்கப்பட்ட இக்காரியாலைய திறப்பு விழாவில் மேல் மாகான சபை உறுப்பினர்களான பைரூஸ் ஹாஜி, முஜிபுர் ரஹ்மான், நவசமாஜ கட்ச்சியின் தலைவர் விக்ரமபாகு கருனாரத்ன, ஐக்கிய தேசியக் கட்ச்சியின் பாரளமன்ற உறுப்பினரான கிறான் விக்ரமதுங்க, திவங்கா சோலாலங்காராச்சி, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம்.எச்.எம் நெளபர், ஆகியோர்கள் பேச்சாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இங்கு உரையாற்றிய முன்னாள் கொட்டிகாவத்தை முள்ளேரியா பிரதெச சபை தவிசாளரின் மணைவி திவங்கா சோலாலங்காராச்சி
, அன்மையில் கல்கிஸ்சை தெகிவளை நகரசபையின் உறுப்பினரான சவித்தடி சில்வாவை வைத்து ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அரசாங்கமானது அழகான நாடகம் ஒன்றினை அரங்கேற்றியது. அது அவர்களுடைய நாடகத்தின் முதலாவது பகுதியாகும். அதன் இரண்டாவது பகுதியாக எனது கணவர் பிரசன்ன சோலாலங்காராச்சி குறித்த சாவித்தடி சில்லவாவிடம் ஆயுதம் ஒன்றினை கொடுத்ததாக தெமட்டகொடை குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளார். எனக்கு எனது கணவரைப் பற்றி நன்றாக தெரியும் அவர் எந்த வகையிலும் ஆயுத காலாச்சாரத்துடன் தொடர்பு பட்ட நபர் கிடையாது எனக் கூறிய திவங்கா  இப்போது பாதுகாப்பு அமைச்சினால் எனது கணவரை கைது செய்து சிறையில் அடைக்க முயற்சித்து வருவதானது இந்த தேர்தல் முடியுமட்டும் எனது கணவருடைய வாயை மூடி வைப்பதற்காகவே எனத் தெரிவித்தார்.


மேலும் உரையாற்றிய திவங்கா. இந்த நாட்டில் இவ்வாறுதான் காணப்படுகின்றது ஜனநாயக உரிமையான ஒருவருக்கு இருக்கின்ற கருத்துச் சுதந்திரம். இவ்வாற நிலைமை முதல் முறையாக எமது பெண்களுக்கு இடம்பெற்ற சம்பவம் அல்ல என்பதோடு  சரத் பொன்சேகாவின் மணைவிக்கும்  பாரதிலக்ஸ்மனின் மணைவிக்கும்  கிருனிக்கா பிரேம சந்ரக்கும், ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மணைவிக்கும், பிரதீப் கெட்டி கொடவின் மணைவிக்கு என முக்கிய பெண்மனிகளுக்கு மிகப் பெரிய துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. அதே போன்ற ஒன்றையே இப்போது நானும் முகம்கொடுக்க நேரிட்டுள்ளது. இப்படியான ஜனநாயக மீறல்களினாலேயே இந்த நாட்டு பெண்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்க வேண்டும் எனற தீர்மானத்தை எடுத்துவிட்டார்கள். எனக் கூறினார்.

இக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்ச்சியின் பாரளமண்ர உறுப்பினர் கிறான் விக்கரமதுங்க உரையாறுகையில் நாட்டின் நீதிதுறையில் எல்லா வகையான அதிகாரங்களுக்கும் பொறுப்பாக உச்சியில் இருப்பவர் ஜனாதிபதியே. ஆகவே அவர்தான் இந்த நாட்டில் நடகின்ற சட்டவிரோத செயல்களுக்கும்  ஜனநாக மீறல்களுக்கும் பொறுப்புக் கூறவேண்டும் என்ற பானியில் ஆழமான கருத்துக்களை முன்வைத்ததோடு, நவசமாஜ கட்ச்சியின் தலைவர் விக்ரமபாகு கருனாரத்னவும் நாட்டின் பொருளாதாம் பின்னோக்கிச் செல்வதற்கான காரணங்களை விளாவாரியாக விளக்கிய கருத்துகள் அடங்கிய காணொளிகளை எமது இணைய நாளிதல் வாசகள் இங்கே பார்வையிடலாம்.

 வீடியோ பைரூஸ் ஹாஜியின் உரை :




 வீடியோ திவங்கா :




 வீடியோ கிறான்  :



 வீடியோஇவிக்ரமபாகு :