Samad Ashraf
ஜனாதிபதித் தேர்தலுக்கான காய்நகர்த்தல்களில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக இறங்கியுள்ளன. கடந்தகாலங்களில் பாராளுமன்ற ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாகவும் , ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாகவும் விளங்கிய அரசியல் வானில் சிம்மசொப்பனமாக திகழ்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதித் தேர்தலில்யாருக்குஆதரவளிக்கப் போகின்றது என்ற வினா எழுப்பப்பட்டுவருகின்றது. மர்ஹ_ம் அஷ்ரப்பின் மறைவுக்குபின்னர் அக்கட்சியின் கட்டமைப்பில் ஏற்படுத்தப்பட்டமாற்றங்கள் மு.கா.தலைமையை சிந்தித்து செயலாற்ற முடியாத அளவுக்கு நெருக்குதலுக்குதள்ளியுள்ளது.
தேசியரீதியான சமூக ஒற்றுமைக் கோட்பாடு சிதைக்கப்பட்டு ,பிரதேசரீ தியானஅரசியல் பலங்களை தீர்மானிக்கும் மனோபாவம் மு.காவுக்குள் வளர்ந்துள்ளதையே இப்போக்குகாட்டுகின்றது. முஸ்லிம்களின் அரசியல் முகவரியைப் பறைசாற்றும் நோக்கில் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தசாப்தகாலத்தில் பாதைமாறி பயணிக்க புறப்பட்டதற்கான காரணங்கள் பல.
தற்போதைய தலைமையை நெருக்குதல்,அழுத்தங்களுக்குள் தடுமாறவைக்கும் ஓர் இரண்டாம் மட்டசக்தி மு.காவுக்குள் வளர்ந்து வருவதையே காணமுடிகின்றது. இதற்குகட்டியம் கூறுவதுபோல் மு.காதலைமையின் அண்மைக்கால தடுமாற்றங்கள் அமைந்துள்ளன. இந்நிலைமை நீண்ட காலமாக நீறுபூத்த நெருப்புபோல் கட்சிக்குள் மறைந்துகிடந்துள்ளது. கடைசியாக நடைபெற்ற கிழக்குமாகாண சபைதேர்தலின் பின்னர் இக்கட்சியின் இரண்டாம் மட்டம் படுத்தும் பாடும் தலைமைபடும் அவஸ்தையும் தற்போதுவெளிச்சத்துக்குவந்துள்ளது.
அரசுக்குஎதிரான நிலைப்பாடுகள் கிழக்குமாகாண முஸ்லிம்களிடையே அதிகரித்துவரும் நிலையில் மு.காவின் தலைமை,மக்களின் மனோநிலைக்கு மதிப்பளித்து சமூகத்தின் உண்மையான பிரதிநிதி மு.காவே என்பதைபுடம் போட்டுகாட்ட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது . கிழக்கு மாகாண தேர்தலில் தனித்து போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்கள் தொடர்பாகஅரசின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி பிரசாரங்களை முன்னிலைப்படுத்தியதால் 80,000 வாக்குகளைப்பெற்றுக் கொண்டது.
மு.காவின் பெருந்தலைவர் அஷ்ரப்பின் காலத்தில் கூட அம்பாறை மாவட்டத்தில் இவ்வளவுதொகையானவாக்குகள் கிடைத்திருக்கவில்லை. மகிந்தவின் ஆட்சியை ஓரம் கட்டாவிட்டாலும் ஓர் எச்சரிக்கைக்காவது கிழக்குமாகாணசபையில் தமிழ் கூட்டமைப்பைஆதரித்து இருக்கலாம்,ஏன்றகருத்து அப்போது மேலோங்கியிருந்தது. அவ்வாறுஆதரவு வழங்கியிருந்தால் முஸ்லிம் காங்கிரஸ் 05 வருடங்களுக்கும் முதலமைச்சர் பதவியை தன்வசப்படுத்தியிருக்கலாம். எனினும் கட்சியின் தவிசாளர் பதவியை அலங்கரித்துக் கொண்டிருக்கும் இரண்டாம் தலைமை இதை கடுமையாக எதிர்த்ததாலும் கட்சி இரண்டாக பிளவுபடும் நிலைமை ஏற்பட்டதாலும் மு.காதலைமை முடிவை மாற்றிக் கொண்டு மகிந்தவி;டமே மண்டியிட்டது. இவ்வாறான நெருக்குதல்கள் ,அழுத்தங்கள்,அச்சுறுத்தல்களை விடுக்கும் ஓர் சக்தி, மு.காவுக்;குள் இருக்கும் வரை மகிந்தவின் ஊது குழலாகவே மு.காசெயற்பட வேண்டி இருக்கும் தலைமையைமீறிச் சென்றுஅமைச்சர் பதவியைஎடுத்துக் கொண்டமை,கட்சியின் சக எம்பிக்கள்,மாகாண சபை உறுப்பினர்கள் ,உள்ள+ராட்சி உறுப்பினர்களை ஆசை வார்த்தை காட்டி கட்சிக்குள்ளேயே தலைமைக்கு எதிரானஅணியை உருவாக்கும் போக்கும்,பொதுமேடைகளில் மிகவும் பண்பற்ற முறையில் தலைமையை விமர்சிப்பதும் அரசாங்கத்தை அபரிமிதமாக ஆதரித்துபேசுவதும் மு.காவின் இரண்டாம் மட்டதலைமையின் வாடிக்கையாகிவிட்டது. இதனால் முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால போராளிகள், மூத்தஉறுப்பினர்கள் விரக்தியில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுவருகின்றது.
அரசியலைவிடவும் மிகப்பலமாக உள்ள சமய நம்பிக்கைகளை,கொள்கை,கருத்து,சிந்தனைரீதியாக உருக்குலைத்து கிழக்கு மாகாணத்தின் மிகப்பழைய வரலாற்றை காத்தான்குடி போன்ற ஊர்களின் கட்டுக் கோப்புகளை தகர்ப்பதற்கு திரைமறைவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக முஸ்லிம்களின் ஜென்மவிரோதிகளாக வளர்ந்துள்ள பொதுபலசேனாவுடன் சில விடயங்களில் உடன்பாடு ஏற்பட்டது போலதெரிகிறது.
ஆத்மீகரீதியான இஸ்லாமிய அமைப்புக்களை மட்டுப்படுத்தி தங்களின் கொள்கைகளை கிழக்கில் புகுத்தவும் அரசியல் பலங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளது. இதற்காக இனவாத சிங்கள அமைப்புக்களுக்கு நெருக்கமான புள்ளிகளுடனும் கிழக்கின் இராணுவ உயர்மட்டங்களுடனும் பல்வேறு சந்திப்புக்கள் நடைபெற்றுள்ளன. காத்தான்குடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ரவூப் மௌலவியின் அடக்கஸ்தலத்தை பாதுகாக்கவும் இந்தசக்திகள் துணைபோயுள்ளன. அதன் ஊடாக ரவூப் மௌலவியின் மார்க்கக் கொள்கை உடையோரை பலப்படுத்தி அவர்களைதம் வசப்படுத்துவதே இதன் பின்னணியாக இருக்கிறது.
இவர்களின் இந்தமுயற்சிகள் வெற்றியளித்தால் ஊர் இரண்டாகப் பிளவுபடும். ஊரின் கட்டுக்கோப்பு சிதைவடையும். இதன் மூலம் ஒருதொகை வாக்குகளை தாரைவார்க்கலாம் என்றதிட்டம் வெளிச்சத்துக்குவந்துள்ளது. ஒருவேளை முஸ்லிம் காங்கிரஸ் மகிந்தவின் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தாலும் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் மு.காவுடன் செல்லவிடாமல் தடுப்பதற்கே இந்த பகீரதப் பிரயத்தனங்கள் எல்லாம். கொந்தராத்து வேலைகளைமிகவும் கச்சிதமாக முன்னெடுத்துவருபவர்கள் போலி வீடியோநாடாக்களையும் பயன்படுத்த திட்டமுள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம்கள் தொடர்பாக காத்திரமான தீர்மானங்களை எடுக்கமுடியாத சூழ்நிலை இருக்கின்றது. இரகசிய கூட்டங்கள் அவ்வப்போதே புதிய தொழில்நுட்பம் மூலம் போய்ச்சேர வேண்டிய இடத்திற்கு அச்சொட்டாய் கிடைக்கிறது.
ஆட்சிக்காக,அதிகாரத்திற்காக,காசுக்காக,கப்பலுக்காக எதையும் செய்யலாம் என்ற நிலை உருவானபின்னர் மு.கா.தலைமை என்னதான் செய்யப் போகின்றதுஎ ன்பது கேள்விக்குறியாகிஉள்ளது ?.

.jpg)