Advertisement

Main Ad

புலமைப் பரீட்சையால் கண்ணீர் சிந்திய பெற்றோர்கள்.!

 முஹம்மட் ஜெலீல்

2014 ம் ஆண்டிற்கான ஐந்தாம் தரப்புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த தம்பி, தங்கையர்கள் அனைவருக்கு எனது பாராட்டுக்களை தெரிவிப்பதோடு,

இப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியானதையடுத்து நேற்றைய தினம் எமது பிரதேசங்களில் சித்தியடையாத மாணவர்கள் சகிதம் மாணவர்களின் பெற்றோர்கள்கூட கண்ணீரில் மூழ்கியதை காணக்கிடைத்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது, இது தவிர சில பொற்றோர்கள் தமது குழந்தைகளை வெறித்தனமான பேச்சுக்களால் திட்டித்தீர்த்தும் அடித்தும்மிருக்கின்றார்கள்.

உண்மையில் இது பெற்றோர்களின் அறியாத்தன்மையை வெளிப்படுத்துகின்றது. இதுதான் உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை தீர்மானிக்கு பரீட்சையோ தேர்வோ அல்ல இதற்கு பிறகுதான் அவர்களின் கல்வியே ஆரம்பிக்கப்படுகின்றதென்தை பெற்றோர்களாகிய நாம் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும் .

தமது குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை போதிக்கவேண்டும் என்பது அனைத்து பெற்றோர்களின் நியாயக்கருத்துக்கள்தான் அதற்காக குழந்தைகளை வதைப்படுத்தி கல்வியை  புகட்ட நினைப்பதென்பது அநியாய கருத்துக்களாகும்.

இதில் பெற்றோர்கள் இழக்கும் தவறுகள், அதிகார செயல்களால் தமது குழந்தைகளின் கல்வியை முனகர்த்தி செல்வதென்பது முற்றிலும் தவறான செயலாகும். இதனால் பிஞ்சுக் குழந்தைகளின் மனங்களில் வெறுப்பினை விதைத்து அவர்களை மன உளச்சலுக்கு ஆளாக்கி கல்விமேல் வெறுப்பினை உண்டுபண்ணுவதற்குரிய வழியை பெற்றோர்களாகிய நாமே விதைத்துவிடுகின்ரேம் என்பத உணர்ந்துகொள்ளவேண்டும்.

ஆகையால் பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகள் இப் பரீட்சையில் சித்தியடையாத போதிலும் அவர்களை கண்டிப்பதை தவிர்த்துவிட்டு அவர்கள் மேற்கொண்டு கல்விபெற ஓர் சிறந்த பெற்றோர்களாக உங்கள் முழு ஒத்துளைப்பினை வழங்க முன்வரவேண்டும்.

முஹம்மட் ஜெலீல் நிந்தவூர்.